கட்டிடங்கள் பட்டைய கல்வியகத்தின் (CIOB)பெருமைக்குரிய மூன்று சூழலுக்கு நட்பான சான்றுகளைப் பெற்றுக் கொண்ட ஒரே இலங்கை நிறுவனமாக JAT ஹோல்டிங்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 

நிறுவனத்தினால் பின்பற்றப்படும் புத்தாக்கமான கட்டிட மற்றும் நிர்மாண மூலப்பொருட்களுக்கு கௌரவிப்பை வழங்கும் வகையில் இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் மூலமாக பின்பற்றப்படும் “புவிக்கு முக்கியத்துவம்” (Earth First) கொள்கையின் பிரகாரமான ஒழுக்கநெறியுடன் கூடிய செயற்பாடுகள் இந்த சான்றிதழ்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் நிலைபேறான செயற்பாடுகளில் வாடிக்கையாளர்களையும் பங்கேற்கச் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. 

CIOB சூழலுக்கு நட்புறவான விருது என்பது, சிங்கப்பூரின் கட்டிடங்கள் மற்றும் நிர்மாண அதிகார சபை, நெதர்லாந்தின் கட்டிடங்கள் மற்றும் நிர்மாணச் செயற்பாடுகளில் ஆய்வுகள் மற்றும் புத்தக்க நடவடிக்கைகளுக்கான சம்மேளனம், சிங்கப்பூரின் கிறீன் பில்டிங் சம்மேளனம் மற்றும் இலங்கையின் மத்திய சூழல் அதிகார சபை ஆகியவற்றின் பிரதிநிதித்துவத்துடன் வழங்கப்படுகின்றது. இலங்கையின் நிர்மாணத்துறையை சூழலுக்கு நட்புறவான கட்டிடங்களை நிர்மாணப்பதை நோக்கி வழிநடத்திச் செல்வது இதன் நோக்கமாக அமைந்துள்ளது. 

இந்த முறைகளை பின்பற்றி வருகின்றமையை கௌரவித்து, தயாரிப்புகள் பெயின்ட் மற்றும் மேற்பூச்சுகள் பிரிவில் இரு தங்க விருதுகளை Permoglaze Exterior Emulsion மற்றும் Permoglaze Interior Emulsion ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டிருந்தது. வெள்ளி விருது Permoglaze Water based enamel தெரிவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த விருதுகளை பெற்ற இலங்கையின் ஒரே நிறுவனம் எனும் பெருமையை JAT பெற்றுக் கொண்டது.

நாட்டில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களை விநியோகிப்பதுடன், புத்தாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கமைய பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆய்வு மற்றும் அபிவிருத்தி கூடத்தையும்  கொண்டுள்ளது. புத்தாக்கமான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவது தொடர்பில் தனது தொடர்ச்சியான மேற்பார்வை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில், JAT தேசத்தின் சூழல் பாதுகாப்பான செயற்பாடுகளுக்கும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தெரிவுகளில், வீடுகளுக்கான அலங்கார பூச்சு வகைகள், தொழிற்துறைக்கான இமல்ஷன் வகைகள், வெளிப்புறச் சுவர்களுக்கான நிறப்பூச்சு வகைகள், பராமரிப்புப்பூச்சுகள், Putty வகைகள் மற்றும் பிளாஸ்டர் வகைகள், மினரல் ஃபைபர் அல்லது ஸ்ரீல் சீலிங் வகைகள், பலகை தளங்கள் மற்றும் நிலங்கள், அலுவலக இருக்கைகள் மற்றும் மேசைகள், தச்சு செயற்பாடுகள், ஒட்டும்பசைகள் மற்றும் பெயின்ட் தூரிகைகள் போன்றன அடங்கியுள்ளன. 1993 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், தொடர்ச்சியான நவீன, புத்தாக்கமான மற்றும் புரட்சிகரமான தீர்வுகளை முடிவுறுத்தல் துறையில் JAT வழங்கி வந்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற வர்த்தக நாமங்களான இத்தாலியின் Sayerlack மரவேலை முடிவுறுத்தல்கள், பிரித்தானியாவிலிருந்து Permoglaze அலங்கார இமல்ஷன் மற்றும் வெதர் கோட் பெயின்ட் வகைகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து ஹேர்மன் மில்லர் தெரிவுகளையும் இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது.  இலங்கையில் காணப்படும் சிறந்த 10 பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக JAT ஹோல்டிங்ஸ் திகழ்கிறது.