மட்டக்களப்பில் சுனாமி : மக்கள் பெரும் பதற்றம் ; காலநிலை அவதான நிலையம் மறுப்பு

Published By: Priyatharshan

15 Nov, 2017 | 12:42 PM
image

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடம் ஆகிய பகுதிகளில் சுனாமி பீதியால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

களுவாஞ்சிக்குடியிலுள்ள 50 திட்டத்திலுள்ள கிணறுகளிலுள்ள நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் மக்கள் மத்தியில் சுனாமி பீதியேற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டகளப்பு, நவலடி பகுதியிலுள்ள  பாடசாலை மூடப்பட்டு அங்கிருந்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மணவர்கள் ஆகியோர் வெளிறேறிவருவதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பை அண்டிண பகுதியிலுள்ள கடற்பகுதி சீற்றமாக காணப்படுவதாகவும் களுவாஞ்சிக்குடி 50 வீட்டத்திட்டத்திலுள்ள கிணறுகளில் நீர் திடீரென வற்றியதால் சுனாமி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இது தொடர்பில் வீரகேசரி இணையத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் தொடர்புகொண்ட கேட்டபோது, சுனாமி தொடர்பான எவ்விதமான எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லையெனவும். மக்கள் பீதியால் இவ்வாறு பதற்றமடைந்துள்ளதாகவும் எனவே மக்கள் எவ்விதமான அச்சமடையத் தேவையில்லையெனவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11