ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் இடம்­பெற்­று­வரும்  28ஆவதுகாலக்­கி­ரம மீளாய்வு செயற் குழு    கூட்­டத்­தொ­டரில் இன்று புதன்­கி­ழமை இலங்கை குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.  இதன்­போது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் இலங்கை எவ்­வா­றான முன்­னேற்­றத்தை அடைந்­துள்­ளது என்­பது குறித்து கேள்­விகள் எழுப்­பப்­ப­ட­வுள்­ளன.

விசே­ட­மாக  அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜேர்­மனி,   பெல்­ஜியம் , எஸ்­டோ­னியா, நோர்வே, போர்த்­துக்கல் மற்றும் சுவிட்ஸர்­லாந்து ஆகிய நாடுகள் இலங்கை  மீது கடும் அழுத்­தத்தை பிர­யோ­கிக்கும் வகையில்   கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளன.   

இந்த நாடுகள் இலங்கை தொடர்பில் கடும் அதி­ருப்­தியை  வெளியிட்டு கேள்­வி­களை    ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு ஏற்­க­னவே அனுப்­பி­யுள்­ளன. இதில்  அமெ­ரிக்­காவும்  பிரிட்­டனும்  யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையின் முன்­னேற்றம்   தொடர்பில்  கடும் அதி­ருப்­தியை வெ ளியிட்­டுள்­ளன. 

அதா­வது அர­சாங்கம் எப்­போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி­யான நம்­ப­க­ர­மான விசா­ரணைப் பொறி­மு­றையை முன்­வைக்கும்?

சிறு­பான்மை மதங்­களைச் சேர்ந்த மக்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது?

பொது மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்கு அர­சாங்கம் எவ்­வா­றான நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது? காணி திருப்பி அளிக்­கப்­ப­டாத மக்­க­ளுக்கு எவ்­வாறு நட்­ட­ஈடு வழங்­கப்­படும்? 

ஜெனிவா பிரே­ர­ணையின் பிர­காரம் அர­சாங்கம் எப்­போது பொறுப்­புக்­கூறல் விசா­ரணை பொறி­மு­றையை எப்­போது முன்­வைக்கும்?

உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை அமைப்­பதில் அர­சாங்கம் என்ன முன்­னேற்றம் அடைந்­துள்­ளது?பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு பதி­லாக கொண்டு வரப்­படும் புதிய சட்டம் சர்­வ­தேச தரத்தை பிர­தி­ப­லிக்­குமா?  இவ்­வாறு   பல்­வேறு கேள்­விகள்   நாடு­க­ளினால் எழுப்­பப்­பட்­டுள்­ளன.    இந்த கேள்­வி­க­ளுக்கு  ஜெனீவா சென்­றுள்ள  பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி. சில்வா  பதி­ல­ளிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

மீளாய்­வுக்கு முன்­ன­தாக இலங்கை அர­சாங்கம் 25 பக்க தேசிய அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ள­தோடு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் காரி­யா­லயம் இலங்கை மீதான அவ­ன­தா­னிப்­புக்­களை 12 பக்க அறிக்­கை­யா­கவும், அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள் 22 பக்­கங்­களில் இலங்கை குறித்த அறிக்­கை­யொன்­றையும் வெளி­யிட்­டுள்­ளன.

இலங்கை முன்­வைத்­துள்ள அறிக்­கையில்  இலங்கை அர­சாங்­க­மா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ள­தாக  தெரி­வித்­துள்­ளது.  குறிப்­பாக காணா­மல்­போனோர் அலு­வ­லகம்  தொடர்­பான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­துடன்  இது­வரை  வடக்கு, கிழக்கில்  24 ஆயி­ரத்து 336 ஏக்கர் காணிகள் இரா­ணு­வத்­தி­னரால் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

காலக்­கி­ரம மீளாய்வு பொறி­மு­றையின் பிர­காரம்  ஐக்­கிய நாடு­களின் அனைத்து அங்­கத்­துவ நாடு­க­ளி­னதும்  மனித உரி­மைகள் நிலை­மை­களை தலா ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஒரு­த­டவை வரு­டாந்தம் நடை­பெறும் 3 செயற்­குழு அமர்­வு­களின் போது மீளாய்வு செய்­யப்­ப­டு­கின்­றன. அதன் பிர­காரம் வரு­ட­மொன்றில் சர்­வ­தே­சத்தில் உள்ள  42 நாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்­யப்­ப­டு­கி­றது.  

அந்­த­வ­கையில் இலங்­கையின் மனித உரி­மைகள் நிலைமை தொடர்­பாக  கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் முத­லா­வது தட­வை­யா­கவும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது தடவையாகவும் மீளாய்வு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் பல்வேறு  பரிந்துரைகளைக் கொண்ட இறுதி அறிக்கையும்  இதன்போது நிறைவேற்றப்பட்டிருந்தது. 

இவ்வாறான நிலையில் அந்தப்பரிந்துரைகளின் பிரகாரம் இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ள விடயங்கள் தொடர்பில் இம்முறை மீளாய்வு செய்யப்படும் போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.