சீனியர் புஷ்ஷின் ஷேஷ்டையில் சிக்கிய சிறுமி

Published By: Digital Desk 7

15 Nov, 2017 | 03:04 PM
image

தான் 16  வயது சிறு­மி­யாக இருந்த போது அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்  தனது பிருஷ்ட பாகத்தை தவ­றான முறையில் பற்றிப் பிடித்­த­தாக  பெண்­ணொ­ருவர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

2003ஆம் ஆண்டில்  புகைப்­ப­ட­மொன்­றுக்­காக தனது தாயார் சகிதம் ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷின் அருகில் நின்றபோது அவர்  இவ்­வாறு பாலியல் ரீதி­யான தவ­றான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­தாக ரொஸில்ன் கொரிகான் என்ற மேற்­படி பெண் தெரி­வித்தார்.

கடந்த சில வார காலப் பகு­தியில் ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்­ஷிற்கு எதி­ராக இத்­த­கைய பாலியல் குற்­றச்­சாட்டை  முன்­வைத்த ஆறா­வது பெண்­ணாக  ரொஸில்ன்  உள்ளார்.

அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள சி.ஐ.ஏ. அலு­வ­ல­கத்தில்  ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை சந்­தித்த போதே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

ரொஸில்னின் தந்தை அந்த அலு­வ­ல­கத்­தி­லேயே பணி­யாற்றி வந்­துள்ளார். 

ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் ஷின் நட­வ­டிக்கை தன்னை மிகவும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­ய­தாக  தெரி­வித்த  ரொஸில்னின்,   சிறு­மி­யாக இருந்த தான் அவ­ரது நட­வ­டிக்­கையால் குழப்­ப­ம­டைந்­த­தாக  கூறினார்.

மேற்­படி சம்­பவம் இடம்­பெற்ற போது ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் வயது 79 ஆகும். அந்தப் புகைப்­ப­ட­மெ­டுக்­கப்­பட்டபோது தனது இடுப் பைப் பிடித்­தி­ருந்த  ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்   சட்­டென எதிர்­பா­ராத தரு­ணத்தில் தனது பிருஷ்டப் பகு­திக்கு கரத்தை நகர்த்தி  அத்­து­மீ­ற­லான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­தாக அவர் கூறினார்.

கடந்த ஒக்­டோபர் மாதத்தில்   ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ்  புகைப்­ப­ட­மெ­டுக்­கையில் தம்­மிடம் அத்­து­மீ­ற­லான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­தாக பல பெண்கள் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10