மரு­ம­களை வல்­லு­ற­விற்குட்­ப­டுத்த முயன்ற விடயம் மக­னுக்கு தெரிய வந்­த­மையால் மந்­திரவாதி மாமனார் ஒருவர் தூக்­கிட்டு தற்­கொலை செய்­து­கொண்ட சம்­ப­வ­மொன்று கம்­பளை பிர­தே­சத்தில் இடம்பெற்­றுள்­ளது.

தற்­கொலை செய்­து­கொண்­ட­வ­ர் 52 வயதான சந்­திரசிறி குல­ரட்ண  என்ற மூன்று பிள்­ளை­களின் தந்தையாவார்.

இச்­சம்­பவம் கம்­பளை வத்­தே­ஹேன பகு­தியில் நேற்­று­முன்­தினம்  மாலை இடம் பெற்­றுள்­ளது.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

மேற்­படி மந்­தி­ர­வாதி தனது வீட்­டுக்கு அரு­கா­மையில் சிறிய கோவில் ஒன்­றினை அமைத்து அதில் மந்­திர வேலைகளில்  ஈடு பட்டு வந்­துள்ள நிலையில்  சம்­ப­வ­தினம் கோயிலை சுத்தம் செய்ய தனது மூத்த மகனின் மனை­வி­யான 22 வயதான மருமகளை அழைத்துள்ளார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் குறித்த நபர்  மரு­ம­களை வல்­லு­ற­விற்குட்­ப­டுத்த முயன்ற வேளை, மரு­மகள் கூச்­ச­லி­டவே அவ்­வி­டத்­திற்கு வந்த மகன் தந்­தையை தாக்­கி­விட்டு மனை­வி­யுடன்  வீட்­டி­லி­ருந்து வெளி­யேற முற்­பட்­டுள்ளார்.

இதன்போது குறுக்­கிட்ட மந்­தி­ர­வாதி பிள்­ளை­களை வெளி­யேற விடாமல் தடுத்­துள்­ள­துடன் தான் வெளி­யே­று­வ­தாக கூறி வீட்டை விட்டு சென்றே கோயிலுக்குள் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.