Widow Of Embilipitiya Youth Files FR Petition Against Police

எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞனின் மனைவி, 10 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கதல் செய்துள்ளார்.

உயர்நீதிமன்றில் அவர் இன்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

அத்துடன் தனது கணவனின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை காலம் தாழ்த்தாது உடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் பலியானார். 

குறித்த இளைஞனை பொலிஸார் மாடியிலிருந்து தள்ளிவிட்ட காரணத்தாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.