கட்சி யாப்பை மீறி செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும்

Published By: Digital Desk 7

15 Nov, 2017 | 12:17 PM
image

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அதிக தொகு­தி­களை வெற்­றி­கொள்­வது உறு­தி­யாகும். கட்­சியை வெற்­றி­பெ­றச்­செய்ய நினைப்­ப­வர்கள் இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்டும். அத்­துடன் கட்சி யாப்பை மீறி செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கட்சி அதி­க­மான கால அவ­கா­சங்­களை வழங்­கி­யுள்­ளது. எதிர்­வரும் காலங்­களில் உறு­தி­யான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின்  இளைஞர் அமைப்பின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஷாந்த பண்­டார தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இளைஞர் அமைப்பு நேற்று கட்சி காரி­யா­ல­யத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் சிறி­லங்கா சுதந்­திர கட்சி அதி­க­மான தொகு­தி­களை கைப்­பற்­று­வது உறு­தி­யாகும். தேர்தல் முடி­வு­களின் பின்னர் மக்கள் யாருடன் இருக்­கின்­றனர் என்­பதை அறிந்­து­கொள்­ளலாம். அத்­துடன் சில­ருக்கு கட்­சியை பிள­வு­ப­டுத்த வேண்டும் என்ற தேவை இருக்­கின்­றது. இந்த நாச­கார செய­லுக்கு இளை­ஞர்கள் துணை­போ­கக்­கூ­டாது.

அத்­துடன் இதற்கு முன்­னரும் கட்­சியில் இருந்த பெரும் தலை­வர்கள் கட்­சியை விட்டு சென்று தனித்து தேர்­தல்­களில் போட்­டி­யிட்­டுள்­ளனர். ஆனால் அவர்­களால் வெற்­றி­கொள்ள முடி­ய­வில்லை. பின்னர் மீண்டும் கட்­சியில் இணைந்து செயற்­பட்­டனர். கட்­சியில் இருந்து தலை­வர்கள் பிரிந்து சென்­றாலும் ஆத­ர­வா­ளர்கள் எப்­போதும் கட்­சி­யு­டனே இருப்­பார்கள். 

மேலும் கூட்டு எதிர்க்­கட்சி அனு­ரா­த­பு­ரத்தில் நடத்­திய பேர­ணியில் மக்கள் கூட்டம் இருந்­தது. அதற்­காக அவர்கள் எல்­லோரும் அவர்­க­ளு­டன்தான் இருக்­கின்­றனர்  என்று தெரி­விக்­க­மு­டி­யாது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷ்வின் பேர­ணி­க­ளுக்கே அதிக மக்கள் கூட்டம் இருந்­தது. ஆனால் தேர்தல் பெறு­பே­றுகள் எவ்­வாறு அமைந்­தன என்று எல்­லோ­ருக்கும் தெரியும். அதனால் மக்கள் கூட்­டத்தை சேக­ரிப்­பதன் மூலம் மக்கள் தங்­க­ளுடன் இருப்­ப­தாக நினைக்­கக்­கூ­டாது.

அத்­துடன் கட்சி உறுப்­பி­னர்கள் கட்­டாயம் கட்சி யாப்பை பின்­பற்றி நடக்­க­வேண்டும். யாப்பை மீறி செயற்­ப­டும்­போது கட்சி செய­லி­ழந்து விடும். அத்­துடன் கட்சி யாப்பை மீறி செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக கடந்த காலங்­களில் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­காமல், எமது நிலைப்­பாட்டை அவர்கள் விளங்­கிக்­கொள்­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கி­யி­ருந்தோம். சிலர் குறு­கிய காலத்­திலே விளங்­கிக்­கொண்டு எம்­முடன் இணைந்து கொண்­டனர். சிலர் சிறிது காலம் சென்று இணைந்து கொண்­டனர். என்­றாலும் தொடர்ந்தும் கட்சி யாப்பை மீறி­செ­யற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்க முடி­யாது. எதிர்­கா­லத்தில் கடு­மை­யான தீர்­மா­னங்­களை எடுக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும்.

அத்துடன் கூட்டு எதிரணியில் இருப்பவர்களை இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கை எடுப்பது பயத்தில் அல்ல. கட்சியில் இருக்கும் பற்றிலாகும். அத்துடன் அவர்கள் இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் இல்லாமைக்கான காரணத்தை சந்தர்ப்பம் வரும்போது வெளிப்படுத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58