ஆனமடுவ பகுதியில், சக ஆசிரியையிடம் ஆசிரியர் ஒருவர் சில்மிஷம் செய்த விவகாரம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனமடுவை, நவகத்தேகமவைச் சேர்ந்த பாடசாலையில் 29 வயதுப் பெண் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்தார். இவர் திருமணமாகாதவர். 

இதே பாடசாலையில் 30 வயது ஆசிரியர் ஒருவரும் பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே திருமணமானவர்.

மழைநாள் ஒன்றின்போது, பாடசாலை முடிந்து மாணவர்கள் வெளியேறிவிட்டிருந்தனர். ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறையில் மழை விடும் வரை குறித்த ஆசிரியை தனியே காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த சந்தேக நபரான ஆசிரியர், “என்னைப் பார்த்து பயந்துவிட்டீர்களா?” என்று ஆசிரியையிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு, “நீங்கள் என்ன பேயா பயப்பட?” என்று ஆசிரியை பதில் கேள்வி கேட்டிருக்கிறார். அப்போது திடீரென அந்த ஆசிரியர், ஆசிரியையைக் கட்டித் தழுவி முத்தமிட முயன்றதுடன், பாலியல் ரீதியாக கீழ்த்தரமான முறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளார்.

அதிர்ச்சியுற்ற அந்த ஆசிரியை உடனடியாக அறையை விட்டு வெளியே வந்ததுடன், நேரடியாக பொலிஸ் நிலையம் சென்று குறித்த ஆசிரியர் மீது முறைப்பாடு செய்துள்ளார்.

தற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியையும், ஆசிரியரும் வெவ்வேறு பாடசாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் மீது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.