எம்.எம்.மின்ஹாஜ்

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம் நாளை சிறிகொத்தா கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை காலை 11 மணிக்கு கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில்  செயற்குழு கூட்டம் நடத்தப்படவுள்ளது. 

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் உள்ளிட்ட பல சிரேஷ்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.