நாட்டில் நிலவிய பெற்றோல் தட்டுப்பாடு பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கடந்த 7ஆம் திகதி அமைச்சர்களான பாட்டாளி சம்பிக்க ரணவக்க,சரத் அமுனுகம மற்றும் அனுரபிரியதர்ஸன யாப்பா ஆகியோரை குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.