ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள திடீர் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஊவா பரணகம பிரதேச செயலக அரச ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு பதுளை மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள திடீர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரதேச செயலக அரச ஊழியர்கள் இன்றைய தினம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்ததுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை இரத்து செய்யும் வரை தாம் இவ் பணி பகிஸ்கரிப்பினை தொடரவுள்ளதாக பிரதேச செயலக அரச ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக இன்றைய தினம் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் யாவும் முடங்கியிருந்ததோடு, பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.