இறைச்சியை ஆடையாக அணிந்த அழகு ராணிகள்

Published By: Digital Desk 7

14 Nov, 2017 | 10:00 AM
image

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் முகமாக பிரேசிலில் நடந்த "மிஸ் பம் பம் பிரேஸில்" எனும் அழகு ராணி போட்டியில் சிறந்த பின்னழகு கொண்ட பெண்ணை தெரிவுசெய்தவற்கான போட்டியில்  பங்குபற்றிய யுவதிகள் சிலர் இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடையணிந்து வந்துள்ளனர்.

பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்குடன் போட்டியில்  பங்குபற்றிய யுவதிகள் இறைச்சியினலான ஆடை அணிந்தனராம்.

பிரேஸிலின் சாவோ பௌலோ நகரிலேல் அண்மையில் "மிஸ் பம்பம்" போட்டி நடைபெற்றது.  இப் போட்டியில் சுமார் 50 கிலோ எடையுள்ள இறைச்சியை தமது நீச்சலுடைகைளுக்கு மேலாக போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் ஆடை போல் அணிந்திருந்தனர்.

பெண்கள் வெறும் இறைச்சித் துண்டு அல்ல என உணர்த்துவதே தமது நோக்கம் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல பாடகிகளில் ஒருவரான லே டி காகா 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இசை விருது வழங்கல் விழா  ஒன்றில் இறைச்சியிலான ஆடையை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right