ரஷ்­யாவில் எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணக் கால்­பந்து தொட­ருக்­கான தகுதிச் சுற்று ஆட்­டத்தில் சுவிட்­ஸர்­லாந்து மற்றும் குரோ­ஷியா ஆகிய இரு அணிகள் தகுதி பெற்­றுள்­ளன.

உலகக் கிண்ணக் கால்­பந்து தொடரில் 32 நாடுகள் பங்­கேற்­கின்­றன. போட்­டியை நடத்தும் ரஷ்யா மட்­டுமே நேர­டி­யாக விளை­யாடும். மீதி­யுள்ள 31 அணி­களும் தகுதிச் சுற்று மூலம் தகுதி பெற முடியும். 25 அணிகள் ஏற்­க­னவே தகுதி பெற்­றி­ருந்­தன.

இந்த நிலையில் சுவிட்­ஸர்­லாந்து, குரோ­ஷியா ஆகிய 2 அணிகள் மேலும் தகுதி பெற்­றுள்­ளன.

கிரீஸ் நாட்டில் நடந்த ஆட்டம் ஒன்றில் குரோ­ஷியா –- கிரீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் எது­வு­மின்றி சம­நி­லையில் முடிந்­தது. இதன்­மூலம் குரோ­ஷியா தகுதி பெற்­றது.  இதே­போல சுவிட்­ஸர்­லாந்து- – வடக்கு அயர்­லாந்து அணிகள் மோதிய ஆட்­டமும் கோல் எது­வு­மின்றி சம­நி­லை­யா­னது. இதன்­மூலம் சுவிட்­ஸர்­லாந்து அணி தொடர்ந்து 4ஆ-வது முறை­யாக உலகக் கிண்­ணத்­திற்கு தகுதி பெற்­றது. ஒட்­டு­மொத்­தத்தில் 11ஆ-வது முறை­யாக விளை­யா­டு­கி­றது.

ரஷ்ய உலகக் கிண்ணக் கால்­பந்து தொட­ருக்கு தகுதி பெற்ற அணிகள் விவரம்:-

ரஷ்யா (போட்­டியை நடத்தும் நாடு), பிரேசில், ஈரான், ஜப்பான், மெக்­சிகோ, பெல்­ஜியம், தென்­கொ­ரியா, சவூதி அரே­பியா, ஜேர்­மனி, இங்­கி­லாந்து, ஸ்பெய்ன், நைஜீ­ரியா, கோஸ்­டா­ரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்­லாந்து, செர்­பியா, போர்த்­துக்கல், பிரான்ஸ், உரு­குவே, ஆர்­ஜன்­டீனா, கொலம்­பியா, பனாமா செனகல், மொரோக்கோ, துனிசியா, சுவிட்ஸர்லாந்து, குரோஷியா. இன்னும் 4 நாடுகள் தான் தகுதி பெற வேண்டி யுள்ளன.