சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க பயிற்­சி­யாளர் பத­வி­யிலி­ருந்து இரா­ஜி­னா­மா செய்த தக­வலை அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக பங்­க­ளாதேஷ் டெஸ்ட் அணித் தலைவர் முஸ்­பிகூர் ரஹீம் தெரி­வித்­துள்ளார். எது எப்­ப­டி­யி­ருந்­தாலும் நடப்­பது எல்லாம் நன்­மைக்கே என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீர­ரான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக செயற்பட்­டு­வந்தார். இவரின் பயிற்சியின் கீழ் பங்­க­ளாதேஷ் அணி மிகப்­பெ­ரிய எழுச்­சியைக் கண்­டது. 

இந்­நி­லையில் கடந்த வாரம் ஹத்­து­ரு­சிங்க அந்தப்பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­து­விட்­ட­தாக தகவல் வெளி­யா­னது. இலங்கை கிரிக்கெட் அணியும் தமக்கு ஒரு தலைமைப் பயிற்­சி­யா­ளரை தேடிக்­கொண்­டி­ருந்த இந்த நேரத்தில் ஹத்­து­ரு­சிங்க பங்­க­ளாதேஷ் அணி­யி­லி­ருந்து வில­கி­யி­ருப்­பதால், அவர் இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யாளர் பத­வியை ஏற்­றுக்­கொள்­ளக்­கூடும் என்று செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இது­கு­றித்து பங்­க­ளாதேஷ் டெஸ்ட் அணித் தலைவர் முஸ்­பிகூர் ரஹீம் கருத்து தெரி­விக்­கையில், ஹத்­து­ரு­சிங்க பயிற்­சி­யாளர் பத­வி­யி­லி­ருந்து ஏன் வில­கினார் என்று தெரி­ய­வில்லை. ஆனால் அந்தத் தகவல் எமக்கு பேர­திர்ச்­சி­யாக அமைந்­தது. எது நடந்தாலும் அது நன் மைக்கே என்று அவர் தெரிவித் துள்ளார்.