பியர் மற்றும் வைன் ஆகி­ய­வற்­றுக்கு விலை குறைக்­கப்­பட்­ட­மையை என்னால் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சுகா­தா­ரத்­திற்கு பாதிப்­பான எந்­த­வொரு திட்­டத்தையும் அத்­து­றைக்­கான அமைச்சர் என்ற வகையில் ஆத­ரிக்க மாட்டேன். ஆகவே வரவு–செல­வுத்­திட்டம் இறுதி வாக்­கெ­டுப்பில் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்னர் பியர், வைன் ஆகி­ய­வற்­றுக்கு வழங்­கிய சலு­கை­களை நிதி­ய­மைச்சர் மீள­பெற வேண்டும் என சுகா­தார, போசனை மற்றும் சுதேச வைத்­தியத்துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன சபை­யில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பின் மூன்றாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

நிதி அமைச்சர் மங்­கள சம­வீ­ரவின் நீல பசுமை திட்­டத்தை நான் பாராட்­டு­கின்றேன். இந்த திட்­டத்தை சர்­வ­தேசம் ஏற்­றுக்­கொண்­ட­மை­யினால் சர்­வ­தேச தரம் வாய்ந்த பட்­ஜட்­டாக இதனை கருத முடியும். நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை தூர நோக்­குடன்  அவ­தா­னித்தே வரவு–செல­வுத்­திட்­டத்தை அமைச்சர் சமர்ப்­பித்­துள்ளார். 

இம்­முறை வரவு–செல­வுத்­திட்­டத்­திலும் சுகா­தாரத்துறைக்கு ஆரோக்­கி­ய­மான முறையில்  நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­படி நாட்டில் சீனி நுகர்­வினை குறைப்­ப­தற்கு அமைச்சர் என்ற வகையில் கடந்த காலங்­களில் பல நட­வ­டிக்­கை­களை நான் எடுத்­துள்ளேன். இந்த திட்­டத்­தினால் கடந்த காலங்­களில் மென்­பான தயா­ரிப்­பினை முன்­னெ­டுக்கும் பல்­தே­சிய நிறு­வ­னங்கள் பாரிய நஷ்­டத்தை சந்­தித்­தது. இதன்­போது பல்­தே­சிய நிறு­வ­னங்கள் என்­னிடம் இந்த திட்­டத்தை கைவி­டு­மாறு கோரின. எனினும் அதற்கு நாம் அடி­ப­ணி­யாது இம்­முறை வரவு–செல­வுத்திட்டத்தில் மென்­பா­னங்­க­ளுக்­கான சீனி அள­வுக்கு கட்­டுப்­பாட்­டினை விதிக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நிதி அமைச்­ச­ரிடம் கோரினோம். இந்­நி­லையில் தற்­போது பல அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் நிதி­ய­மைச்சர் மென்­பா­னங்­களில் உள்ள சீனி ஒரு கிரா­மிற்கு 50 சதம் வரி விதித்­தமை பாராட்­ட­த்தக்­கது.

அத்­துடன்  கரா­ப்பிட்­டிய, மட்­டக்­க­ளப்பு ஆகிய பகு­தி­களில் புற்­றுநோய் பிரி­வினை நிர்­மா­ணிக்க நிதி­ஒ­துக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும்  மூன்று சிறு­நீ­ரக வைத்­தி­ய­சா­லை­களை நிர்­மா­ணிக்­கவும் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­படி சுகா­தாரத்துறைக்கு முன்­னேற்­ற­க­ர­மான நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் சுதேச வைத்­தியத்துறையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு சுதேச வைத்­திய கற்றல் நிறு­வ­ன­மொன்­றினை நிர்­மா­ணிக்­கவும் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே சுகா­தாரத்துறைக்கு இவ்­வா­றான நிதி ஒதுக்­கீ­டுகள் பாராட்­ட­த்தக்­கவை. இதன்­படி சுகா­தார அமைச்­சினால் முன்­வைக்­கப்­பட்ட பல யோச­னைகள் வரவு–செல­வுத்­திட்­டத்தில் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன. 

எனினும் பியர் மற்றும் வைன் ஆகி­ய­வற்­றுக்­கு விலை குறைப்பு செய்­த­மையை ஒரு­போதும் என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நாட்டின் மது­பா­வனை தொடர்­பான நிதி­ய­மைச்­ச­ருக்கு கிடைத்த புள்­ள­ிவி­பரம் முற்­றிலும் பிழை­யா­னது. தற்­போது சட்­ட­வி­ரோத மது­பா­வனை குறை­வா­க­வுள்­ளது. ஐரோப்­பாவில் பியர் பாவ­னையை முன்­னு­தா­ர­ண­மாக எடுத்துக்காட்­டு­வது தவ­றாகும். ஏனெனில் ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான பியர் பாவ­னைக்கும் இலங்­கையின் பியர் பாவ­னைக்கும் பெரும் வித்­தி­யாசம் உள்­ளது. எனவே ஆசி­யா­விற்கு ஐரோப்­பிய நாடுகளின் புள்­ளி­வி­ப­ரங்கள் சரி­வ­ராது. இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் 35 சத­வீ­தத்­திற்குட்­பட்ட வகை­யி­லேயே மது­பா­வனை உள்­ளது. அத்­துடன் சட்­ட­வி­ரோத மது­பா­வனை 6 சத­வீ­தமே உள்­ளது. எனவே பிய­ருக்கும் வைனுக்கும் சலுகை வழங்­கினால் எமது நாட்டு இளை­ஞர்கள் அதி­க­ளவில் புதி­தாக பாதிக்­கப்­ப­டுவர். 

அத்­துடன் வீதி­வி­பத்­து­க­ளுக்கு மது­பா­வனை பிர­தான கார­ண­மாக உள்­ளது. மதுவுக்­கான வரித்­தொ­கையை அதி­க­ரிப்­ப­தனை விடுத்து குறைக்க கூடாது. சவூதி அரே­பி­யாவை போன்று முழு­மை­யாக இல்­லாமல் செய்­யு­மாறு கோர­வில்லை. ஏனெனில் இலங்­கையின் சுகா­தாரம் சர்­வ­தேச தர­மிக்­க­தாகும். அனை­வ­ரி­னாலும் போற்­றப்­ப­டு­கின்­றது. அத்­துடன் சர்­வ­தேச அளவில் சுகா­தாரத்துறைக்­கான பல விரு­து­களை நாம் பெற்றுள்ளோம். எனவே அதனை இல்லாமல் செய்ய வேண்டாம்.

எனவே பியர், வைன் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டமையை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சுகாதாரத்திற்கு பாதிப்பான எந்தவொரு திட்டங்களையும் அத்துறைக்கான அமைச்சர் என்ற வகையில் ஆதரிக்க மாட்டேன். ஆகவே வரவு–செலவுத்திட்டம் இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பியர், வைன் ஆகியவற்றிற்கு வழங்கிய சலுகைகளை நிதியமைச்சர் மீளபெற வேண்டும் என்றார்.