கம்பஹாவில் ஹைப்ரிட் காரில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் : 2 பேர் அயகம, நிக்கவரட்டியவில் கைது

Published By: Robert

14 Nov, 2017 | 10:09 AM
image

கம்­பஹா  பகு­தியின் பிர­பல வர்த்­த­க­ரான ஒஸ்மன் குண­சே­க­ரவை கொலை செய்­வ­தற்­காக வருகை தந்­தி­ருந்த போது, சந்­தேக நபர்கள் கைவிட்டு தப்பிச் சென்­ற­தாக நம்­பப்­படும், மூன்று ரீ–56 ரக துப்­பாக்­கிகள் இருந்த ஹைப்ரிட் ரக காரை வாட­கைக்கு பெற்ற, பிணை கையொப்­ப­மிட்ட இரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

ஏற்­க­னவே காரை செலுத்திச் சென்ற சார­தியை பேலி­ய­கொடை குற்றத் தடுப்புப் பிரி­வினர் கைது செய்­தி­ருந்த நிலை­யி­லேயே, விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக அவர்கள் இந்த இரு­வ­ரையும் கைது செய்­துள்­ள­துடன் இது தொடர்பில் பல்­வேறு தக­வல்­க­ளையும் அம்­ப­லப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர். 

குறித்த இரு சந்­தேக நபர்­களும் அய­கம மற்றும் நிக்க­வ­ரட்­டிய பகு­தி­களில் வைத்து அங்கு சென்ற சிறப்பு பொலிஸ் குழு­வி­னரால் கைது செய்­யப்பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

உட­க­முல்ல பகு­தியைச் சேர்ந்த நகரசபை ஊழியர் ஒரு­வ­ரான 27 வய­தான தாரக உத­யங்க மற்றும் நிக்­க­வ­ரட்­டிய - கல­கெ­தர பகு­தியைச் சேர்ந்த 22 வய­தான அசேன் ஆகி­யோரே இவ்­வாறு கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.

பேலி­ய­கொடை குற்­றத்­த­டுப்புப் பிரி­வுக்கு கிடைத்த தகவல் ஒன்­றுக்கு அமை­வாக இவர்கள் பொலிஸ் பரி­சோ­தகர்  ஜயந்த தஹ­னக, உப பொலிஸ் பரி­சோ­தகர் டபி­ள்யூ.பிய­சிறி, கான்ஸ்­ட­பிள்­க­ளான சுஜீவ நந்­தன அனில் மற்றும் விஜே­சிங்க ஆகியோர் கொண்ட குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். தாரக உத­யங்­கவை அய­கம, இத்­தே­கந்த பகு­தியில் மறைந்­தி­ருந்த போதும், அசேனை அவ­ரது வீட்டில் வைத்தும் கைது செய்­த­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இந்நிலையில் கைதான இரு­வ­ரி­டமும் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் மேலும் பல தக­வல்­களை பொலிஸார் வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளனர். 

அதன்­படி சூட்டி உக்குன் என்னும் பாதாள உலக தலை­வனின் கீழ் செயற்­பட்ட குழுவின் உறுப்­பி­ன­ரான மட்­டக்­குளி - சமிட்­பு­ரவைச் சேர்ந்த அசங்க சம்பத் குமா­ர­விடம் ஒருவர் கார் ஒன்­றினை வாட­கைக்கு பெற்­றுத்­த­ரு­மாறு கோரி­யுள்ளார். 

அவர் பன்­னிப்­பிட்­டிய பகு­தியில் கார் ஒன்­றினை வாட­கைக்கு எடுக்க சென்ற போது அவர் அப்­பி­ர­தே­சத்தை சேர்ந்­தவர் அல்ல என்­பதை காரணம் காட்டி அவ­ருக்கு காரை வழங்க  குறித்த வாடகைக் கார் நிலையம் மறுத்­துள்­ளது. இத­னை­ய­டுத்தே அசங்க தனது நண்­ப­ரான தாரக உத­யங்­கவின் உத­வியை நாடி­யுள்ளார். கதிர்­கா­மத்­துக்கு போவ­தற்­காக காரைப் பெற்றுத் தரு­மாறே அசங்க தன்­னிடம் கோரி­ய­தா­கவும், அதன்­ப­டியே தனது உத­வி­யா­ள­ரான அசே­னுடன் சென்று காரை பெற்­றதா­கவும் தாரக உத­யங்க பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார். 

அத்­துடன் கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி காரைப் பெற்று வரும் போது தான் காரில் இருந்து தேவை ஒன்­றுக்­காக இறங்­கிய சமயம், அசங்க காரை எடுத்­துக்­கொண்டு சென்­று­விட்­ட­தா­கவும், அது தொடர்பில் தொலை­பே­சியில் வின­விய போது, நண்பர் ஒரு­வ­ருக்கு அவ­சர தேவைக்­காக கொண்டு சென்­ற­தாக கூறி­ய­தா­கவும் தாரக உத­யங்­க தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த காரில் துப்பாக்கிகள் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் அசங்க தம்மை தலைமறைவாக இருக்குமாறு கூறியதாகவும் அதன்படியே தான் தலைமறைவாக இருந்ததாகவும் தாரக உதயங்க கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19