( ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் )

எதிர்வரும் 2020 இல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்தார்.

இராஜதந்திர ரீதியாக சர்வதேச நாடுகள‍ை நாம் குறுகிய காலத்திற்குள் வெற்றிகொண்டுள்ளோம். எமக்கென்று பெறுமதி ஒன்று ஏற்பட்டுள்ளது. பல நல்ல யோசனைகளை முன்மொழிந்துள்ளோம். இதன்மூலம் நிலையான அபிவிருத்தியினை தக்கவைத்துக் கொள்ள முடியும். சுற்றுலா துறையில் பாரிய முன்னேற்றத்தை காணவுள்ளோம். 

2020 இல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்கின்றோம். இதற்கான ஹோட்டல்கள் எல்லா பாகங்களிலும் நிர்மாணிக்கவுள்ளோம். கடலோர ரயில் போக்குவரத்து, சுற்றுலாத் துறைக்கான பொலிஸ் துறையில் அதிக கவனம் செலுத்தவுள்ளோம் என மேலும் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.