Selfie Expert மற்றும் Leader ஆன OPPO மொபைல்ஸ், தனது புதிய OPPO F5 இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த அறிமுக நிகழ்வில், தனது புதிய வர்த்தக நாமத்தொனிப்பொருளான 'The Selfie expert and leader' என்பதையும் அறிவித்திருந்தது. 28 சர்வதேச சந்தைகளில் பிரசன்னத்தைக்  கொண்டுள்ள OPPO, தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உலகளாவிய ரீதியில் 200 மில்லியனுக்கும் அதிகமான பரந்தளவு இளம் நுகர்வோர்களால் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட வர்த்தக நாமத்தின் முதலாவது FHD+ full screen மாதிரியாக F5 அமைந்துள்ளது.

இதில் யுA.I. Beauty Technology  உள்ளடங்கியுள்ளது. selfie படமொன்றில் அழகியல் தன்மையை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு தொழில்நுட்பமாக இது அமைந்துள்ளது. A.I. Beauty Technology, selfie புகைப்படக்கலையை புதிய நிலைக்கு உயர்த்தும் வகையில் அமைந்திருக்கும்.

ரூபா 47,990 எனும் விலையில் அமைந்துள்ள F5, நவம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்நிகழ்வில் மேலும் இரு தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இதில், F5 6GB மற்றும் F5 Youth ஆகியன OPPO ரசிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமது தெரிவுகளுக்கு பொருத்தமானதை தெரிவு செய்து கொள்ள வாய்ப்பை வழங்குகின்றன. இந்த இரு தெரிவுகளும் டிசம்பர் மாதம் முதல் சந்தையில் அறிமுகம் செய்யப்படும்.

இளம் நட்சத்திரமான சித்தார்த் மல்ஹோத்ரா (Sidharth Malhotra) OPPO வின் புதிய வர்த்தக நாம தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே காணப்படும் வர்த்தக நாமத்தூதுவரான தீபிகா படுகோன் (Deepika Padukone) உடன் இவர் இணைந்து கொண்டுள்ளார்.

OPPO ஸ்ரீ லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி கருத்துத்தெரிவிக்கையில்,

““OPPO ஸ்ரீ லங்காவை பொறுத்தமட்டில் இது மிகவும் விறுவிறுப்பான தருணம், நாம் நவீன F5 மாதிரியை A.I beauty Technology  உடன் அறிமுகம் செய்துள்ளதுடன், புதிய மூலோபாய பாதையில் வளர்ச்சிப்பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இலங்கையர்கள், குறிப்பாக இளைஞர்கள் இந்த மாதிரியை பெருமளவு வரவேற்பார்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்றார்.

OPPO வின் புதிய வர்த்தக நாமத்தூதுவரான சித்தார்த் மல்ஹோத்ரா தெரிவிக்கையில்,

“வளர்ந்து வரும் இந்த OPPO குடும்பத்தில் நானும் அங்கம் வகிப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். A.I.Beauty Technology குறித்து நான் அதிகளவு திருப்தியடைகிறேன். குறிப்பாக OPPO F5 இல் selfie களை எடுக்கும் போது சிறந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. எனது Selfie கள் எந்தளவு இயற்கையானவையாக அமைந்துள்ளன என்பதையிட்டு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை இளைஞர்களின் Selfie எதிர்பார்ப்புகளை OPPO இனங்கண்டுள்ளமை உண்மையில் வரவேற்கத்தக்கது” என்றார்.

புதிய வர்த்தக நாம தொனிப்பொருளான ‘The Selfie Expert and Leader’ என்பதன் மூலமாக, OPPO வின் நோக்கமான, சிறந்த selfie அனுபவத்தை இளம் நுகர்வோர்களுக்கு பெற்றுக்கொடுப்பது மற்றும் பிரிவில் முன்னிலை வகிப்பது என்பது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. துறையில் தொடர்ச்சியான தலைவராகவும் நிபுணராகவும் OPPO திகழ்கிறது. 2012 இல் முதலாவது Built-in Beautify மென்பொருளை அறிமுகம் செய்திருந்தது. அத்துடன் 2013 இல் 206-பாகை சுழலும் கமரா தொலைபேசியை (N1) அறிமுகம் செய்திருந்தது. 120-பாகை பரந்த குழு கமரா செயற்பாட்டை group Selfies களுக்கு அறிமுகம் (F3)செய்திருந்தது. தற்போது, OPPO F5 அறிமுகத்துடன், இலங்கை சந்தையில் அதன் தலைமைத்துவ நிலை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தினூடாக, இளைஞர்கள் மத்தியில் வர்த்தக நாமம் எய்தியுள்ள வரவேற்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Selfie தொலைபேசிகளை பொறுத்தமட்டில் இது இளைஞர்களின் முதல் தர தெரிவாக அமைந்துள்ளது. 200 இலட்சத்துக்கும்

அதிகமான இளைஞர்கள் OPPO தொலைபேசியை உலகளாவிய ரீதியில் பயன்படுத்துகின்றனர். வர்த்தக நாமத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நாம செயற்பாடுகள் போன்றன இளைஞர்களை மையப்படுத்தி அமைந்துள்ளதுடன், இளைஞர்கள் மத்தியில் புகழ்பெற்றுத்திகழும் விளையாட்டு, நவநாகரிகம் மற்றும் களியாட்டம் ஆகிய நாளிகைகள் ஊடாக இலக்கு வைக்கப்படுகின்றன. OPPO இலங்கை சந்தையில் ஆழமாக ஊடுருவியுள்ளது. வர்த்தக நாமத்தில் உள்நாட்டு ஊழியர்கள் பணியாற்றுவதுடன், இலங்கையின் பாவையாளர்களுக்கு பொருத்தமான தயாரிப்புகளையும் வழங்கி வருகிறது.

இலங்கையின் இளைஞர்களுக்கு மிகவும் சிறந்த Selfie அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

வர்த்தக நாமத்தின்  வினைத்திறனும், நம்பத்தகுந்த மூன்றாம் தரப்பு நிறுவனங்களினால் அறிக்கையிடப்பட்டிருந்தன.

அண்மையில் வெளியாகியிருந்த நீல்சன் அறிக்கை (ஜுலை 2017) நுகர்வோர் விமர்சன குறிப்பில், ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை கொள்வனவு செய்வதில் முக்கிய தீர்மான காரணிகளில் சிறந்த selfie கமரா உள்ளடங்கியிருப்பது அமைந்துள்ளது, அத்துடன் ளநடகநை கமரா என்றதும் வாடிக்கையாளர் மனங்களில் எழுவது OPPO ஆகும். (Top of mind awareness – 39%)

OPPO தனது புதிய தொலைக்காட்சி விளம்பரத்தை சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தீபிகா படுகோன் உடன் அறிமுகம் செய்திருந்தது.

சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரை கொண்ட தொலைக்காட்சி விளம்பரம் அறிமுகம்

செய்யப்பட்ட அதேவேளை, OPPO லங்காவின் வர்த்தக நாம தூதுவர் அஞ்சலோ மெத்தியுஸ், தமது அடுத்த கிரிக்கெட் தொடருக்கு தம்மை தயார்ப்படுத்திய வண்ணமிருந்த வேளை, வீடியோ காட்சி ஊடாக தோன்றி விசேடமாக கையொப்பிமிடப்பட்ட துடுப்பாட்ட மட்டை ஒன்றை வழங்கியிருந்தார்.

பல ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளின் பிரகாரம் இலங்கையில் selfie உள்ளம்சத்தில் Artificial Intelligence ஐ உள்வைக்கும் முதலாவது ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாக OPPO F5 அமைந்துள்ளது. சர்வதேச தரவுக்கட்டமைப்பு, நிபுணத்துவமான புகைப்படக்கலைஞர்கள் மற்றும் மேக்-அப் கலைஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் ஆகியவற்றுக்கமைய முக கட்டமைப்புகள் மற்றும் தோற்றங்களை அது இனங்கண்டிருந்தது.

இதனூடாக, A.I. Beauty Technology வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன் selfie அதிகளவு அசலானவையாகவும் இயற்கையானவையாகவும் தென்பட உதவுகின்றன.

200 க்கும் அதிகமான முகபாவனை இனங்காணல்களை கொண்ட சர்வதேச மனித முகங்களின் உள்ளம்சங்கள், அமைப்புகள் மற்றும் சிறப்பியல்புகளை F5 அடையாளம் காணக்கூடியதாக அமைந்துள்ளதுடன் ஒவ்வொரு நபரின் முக அம்சங்களையும் சருமத்தின் வர்ணம் மற்றும் வகை, இனம், வயது மற்றும் பல அம்சங்களுக்கமைய வகைப்படுத்தி இனங்கண்டுகொள்கிறது.

இவ்வாறு இனங்கண்ட பின்னர், AI Beauty Technology  ஊடாக நபரின் சருமம், கண்கள், உதடுகள் முதல் முகத்தின் வடிவம் ஆகியவற்றுக்கமைய beautify ஐ மாற்றியமைக்கிறது. ஆண்களில் மேம்படுத்தல்கள் மென்மையானவையாக அவர்களை பெண்மை சார்ந்த அம்சங்களை கொண்டவர்களாக காண்பிக்காது. சிறுவர்கள் அல்லது குழந்தைகளுக்கு பெரியவர்களுக்குரிய மெருகேற்றங்கள் வழங்கப்படாது.

OPPO F5 ல் 20MP முன்புற கமரா காணப்படுவதுடன் ultra-sensitive F2.0 aperture மற்றும் 1/2.8” sensor ஐ

கொண்டுள்ளது. இது உள்ளம்சங்களும், கமராவுக்கு அதிகளவு விவரங்களை பெற்றுக்கொள்ள உதவியாக அமைவதுடன், குறைந்த இரைச்சல் மற்றும் குறைந்த ஒளியுடனான சூழ்நிலைகளில் அதிகளவு தகவல்களை பெற்றுக்கொள்ள உதவியாக அமைந்துள்ளன.

முன்புற கமரா Portrait mode இனால் Bokeh effect ஐ பின்புலத்தில் கொண்டிருக்க உதவுவதுடன் ஒவ்வொரு தடவையும் selfie படமெடுத்தலில் உங்களை கவனம் செலுத்த வைக்க உதவுகிறது.

பின்புற கமரா 16MP திறன் கொண்டுள்ளதுடன் பகல் மற்றும் இரவு வேளை படங்களை எடுத்துக்கொள்ள பொருத்தமானதாக அமைந்துள்ளது. பின்புற கமரா F1.8 aperture உடன் பிரகாசமான வேளைகளில் சிறப்பாகவும், இருளான சூழலில் படங்களை தெளிவாக எடுக்கவும் கூடியன.

OPPO வின் முதலாவது 6.0 அங்குல FHD+ full-screen display சாதனமாக F5 அமைந்துள்ளது. பாவனையாளருக்கு vivid தோற்ற அம்சத்தை வழங்குவதுடன், தொலைபேசியின் அளவை அதிகரிக்காமல் இதை மேற்கொள்ள முடியும். இதில் high-resolution 2160 x 1080 dpi திரை 18:9 aspect ratio காணப்படுகின்றன. இந்த விலைப்பிரிவில் காணப்படும் FHD+ full screen display அம்சங்களைக் கொண்ட முதலாவது தொலைபேசியாக F5 அமைந்துள்ளது.

OPPO வின் வடிவமைப்பு கொள்கையான sleek unibody ஐ F5 கொண்டுள்ளது. மெல்லிய தோற்றத்தை வழங்குகிறது. cut-off எதுவுமின்றி, எளிமையான வளைந்த கட்டமைப்புடன், கைகளுக்கு அடக்கமான வகையில் எளிமையான மற்றும் கண்கவர் தோற்றத்தையும் வழங்குகிறது. நீண்ட நேரம் பாவித்த பின்னரும், பாவனையாளரின் கைகளுக்கு எவ்விதமான களைப்பும் உணர முடியாது. 0.4mm laser string தொலைபேசியில் பதியப்பட்டுள்ளது. தொலைபேசி கட்டமைப்புக்கு சிறந்த முடிவுத்தோற்றத்தை சேர்க்கிறது.

Facial Unlock வசதியை F5 கொண்டுள்ளது. புதிய முக கண்டறிதல் தொழில்நுட்பத்தினூடாக, பாவனையாளர்களுக்கு தமது தொலைபேசியை இலகுவாக unlock செய்து கொள்ள முடியும். பாவனையாளர்கள் fingerprint unlock செயற்பாட்டை பயன்படுத்த விரும்பினால், fingerprint reader தொலைபேசியின் பின்புறத்தில் காணப்படுகிறது.

சக்தி வாய்ந்த ஹார்ட்வெயார் உடன் மெருகேற்றம் செய்யப்பட்ட operating system

OPPO வின் Color OS 3.2, உடன் 4G RAM + 32GB ROM மெமரி ஆகியன operating system க்கு மிகவும் மிருதுவான அனுபவத்தை வழங்குகிறது. மூன்று slot tray இனால் இரு Nano கார்ட்கள் மற்றும் ஒரு TF கார்ட்டை ஒரேவேளையில் பயன்படுத்த முடியும். Octa-core CPU புரொசெசர் குறைந்த வலுவை பயன்படுத்துவதுடன், குறைந்த வெப்பத்தை வெளியிடுகிறது. உயர்ந்த வினைத்திறன் வேகத்தை வழங்குகிறது. (முன்னைய Color OS உடன் ஒப்பிடுகையில் 40% அதிகரித்த வினைத்திறனை கொண்டுள்ளது).

F5 பற்றரி ஆயுள் காலம் சிறந்தது, 3200Ah பற்றரியை கொண்டுள்ளதுடன் தொடர்ச்சியாக கட்டமைக்கும் தொழில்நுட்பத்தினூடாக சாதனங்களில் இயங்கும் appகளை கையாளும். இதனூடாக தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் வரை தொலைபேசியை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் (பரிசோதனைகளின் பிரகாரம்).

ஏனைய பிரத்தியேகமான உள்ளம்சங்கள் - எளிமையானது

OPPO F5 ல் சில விசேட உள்ளம்சங்கள் காணப்படுகின்றன. இதில் Game Acceleration அடங்கியுள்ளது. கேமர்களை அடிப்படையாக கொண்டு இது உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளம்சத்தினூடாக, மிருதுவான கேம் அனுபவத்தை பெற்றுக்கொடுப்பதுடன், ஹார்ட்வெயார் வளங்களை முழுமையாக பயன்படுத்தி உள்வரும் அழைப்புகளை கேமுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஒரு பெனர் ஊடாக காண்பிக்கும்.

O-share கோப்பு பகிர்வு தொழில்நுட்பம் Bluetooth ஐ விட 100 மடங்கு வேகமான கோப்பு பகிர்வு தொழில்நுட்பமாக அமைந்துள்ளது. 1 செக்கனினுள் 8 – 10 படங்களை (ஒவ்வொன்றும் தலா 3MB) பகிர முடியும்.

Split Screen உள்ளம்சம் மற்றுமொரு சிறப்பம்சமாக அமைந்துள்ளது, இது chat, பாடல் கேட்டல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பார்வையிடல் ஆகியவற்றை ஒரே தடவையில் மேற்கொள்ள வழிகோலியுள்ளது.

OPPO உலகில் வேகமாக வியாபித்து வரும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாகும், புத்தாக்கமான தொழில்நுட்பம் கண்கவர் வடிவமைப்பு மற்றும் கமரா அனுபவம் போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், கமரா தொலைபேசிகளை உற்பத்தி செய்வதில் OPPO தனது கவனத்தை செலுத்திய வண்ணமுள்ளது. 16MP உடனான முன்புற கமராக்களுடன் கூடிய கையடக்க தொலைபேசிகளை உற்பத்தி செய்த முதல் வர்த்தக நாமமாக OPPO திகழ்கிறது. OPPO அதன் சொந்த உற்பத்திகளை வடிவமைத்து உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகின்றது.

உன்னதமான வடிவமைப்புக்களுடன் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்களும் இணைந்ததாக இந்த உற்பத்திகள் ஊக்குவிக்கப்படுகின்றன. OPPO இனால் முதலாவது மோட்டாரால் சுழற்றக்கூடிய கமரா கொண்ட கையடக்க தொலைபேசி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதில் Ultra HDஅம்சம் மற்றும் 5x Dual fkuh Zoom  தொழில்நுட்பம் போன்றன உள்ளடங்கியுள்ளன.

இளைஞர்களின் ஆழ்ந்த உணர்வுகளுக்கு பொருந்தும் வகையில், OPPO முதன் முதலாக தனது செல்ஃபியை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை 2016 இல் - Selfie Expert F தெரிவுகளை அறிமுகம் செய்திருந்தது. முதல் தொகுதி ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பெருமளவு வரவேற்பு காணப்பட்டதுடன், துறையில் புதிய போக்கையும் ஏற்படுத்தியிருந்தது. 2016ல், உலகின் 4 ஆம் நிலை ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாக IDC இனால் சர்வதேச மட்டத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது OPPO இனால் சிறந்த கமரா திறன் கொண்ட கையடக்க தொலைபேசிகள்  தயாரிக்கப்படுவதுடன், உலகளாவிய ரீதியில் காணப்படும் 200 மில்லியனுக்கும் அதிகமானோர் சிறந்த புகைப்பட அனுபவங்களை இதனூடாக பெற்று வருகின்றனர்.