கொஸ்கொட துப்பாக்கிச் சூடு : முக்கிய சந்தேகநபர் கைது.!

Published By: Robert

13 Nov, 2017 | 01:30 PM
image

காலி,  கொஸ்கொட - குருந்துகம்பியச, மெனிக்கம்மானய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முக்கிய சந்தேகநபர் கட்டுவில பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு  கைது செய்யப்பட்டுள்ளார். 

கொஸ்கொட – நானதொட்ட பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 4 பேர் மரணமடைந்தனர்.

குறித்த துப்பாக்கி பிரியோகத்தில் 39 வயதுடைய நபர் ஒருவரும், 52 வயதுடைய நபர் ஒருவரும் 13 மற்றும் 20 வயதுடைய அவரது இரண்டு மகன்மார்களுமே உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் மனைவியால் சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அடையாளம் காணப்பட்ட நிலையில், பொலிஸாரால் அவர் தேடப்பட்டு வந்துள்ளார். 

22 வயதாக முக்கிய சந்தேக நபர் கொஸ்கொட, நானதொட்ட பிரசேத்தைச் சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர் இன்றைய தினம் பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.  கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15