பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபில்கள் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனமான களனி கேபில்ஸ் பி.எல்.சி. LED மின்குமிழ்கள் உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்திருந்தது. 

அண்மையில் தனது LED மின்குமிழ்கள் தெரிவை இலங்கைச் சந்தைகளில் அறிமுகம் செய்திருந்தது.

தனது பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் கேபில்கள் உற்பத்தியில் 50 வருடங்களுக்கு மேலான கீர்த்தி நாமத்தை களனி கேபில்ஸ் பி.எல்.சி. கட்டியெழுப்பியுள்ளதுடன், காலப்போக்கில் களனி LED குமிழ்கள் மற்றும் ஒளியூட்டல் தீர்வுகள் உற்பத்தியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தது.

களனி இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபில்களை போன்று, களனி ஒளியூட்டல் தயாரிப்புகளும் சந்தையில் நம்பிக்கையை பெற்றுள்ளன.

இலங்கையர்கள் தற்போது களனி LED மின்குமிழ்களை 3 Watt முதல் 11 Watt வரை கொள்வனவு செய்யலாம். இவை Daylight மற்றும் Warm light ஆகிய தெரிவுகளில் காணப்படுகின்றன. Screw மற்றும் Pin தெரிவுகளில் இரு வருட உத்தரவாதங்களுடன் கொள்வனவு செய்யலாம்.

புதிய களனி LED மின்குமிழ்கள் மின்சாரத்தை 85 சதவீதம் வரை சேமிக்கக்கூடியன,15 வருட கால ஆயுட்காலத்தையும் கொண்டுள்ளன. நாட்டின் மக்களுக்கு தமது மின்சார கட்டணப்பட்டியல் அதிகரித்துச்செல்வதை கட்டுப்படுத்திக்கொள்ள இது உதவியாக அமைந்திருக்கும்.

களனி கேபில்ஸ் பி.எல்.சி.யின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் அனில் முன்சிங்க புதிய களனி LED மின்குமிழ்கள் பற்றி கருத்துத்தெரிவிக்கையில்,

பாதுகாப்பான மின்சார மற்றும் தொடர்பாடல் கேபில்கள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு மேலதிகமாக, பரிபூரண ஆய்வுகளை தொடர்ந்து இலங்கையர்களுக்கு LED மின்குமிழ்களுக்கான தேவை காணப்படுவதை கண்டறிந்து அவற்றை உற்பத்தி செய்வதில் ஈடுபட தீர்மானித்ததாக குறிப்பிட்டார்.

“களனி LED மின்குமிழ்கள், இலங்கை நுகர்வோர்களின் வெவ்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கும். அதிகளவு ஒளியை வெளியிடக்கூடிய உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை நாம் கொண்டுள்ளோம். இன்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய LED மின்குமிழ் தெரிவுகள், நீண்ட காலம் பாவிக்கக்கூடிய திறனை கொண்டுள்ளன. மின்சாரத்தையும் சேமிக்கும். வெவ்வேறு வகையான மின்குமிழ்களிலிருந்து போதியளவு வெளிச்சம் வராமை தொடர்பில் முறையிடும் வாடிக்கையாளர்களுக்கு புதிய களனி LED மின்குமிழ்கள் சிறந்த தீர்வாக அமையும். ஏனைய LED மின்குமிழ்கள் குவிய அடிப்படையிலான வெளிச்சத்தை வெளியிடும் நிலையில், களனி LED தெளிவான பரந்த வெளிச்சத்தை வெளியிடும் திறனை கொண்டுள்ளன. எனவே, களனி LED மின்குமிழ்களை எந்தவொரு இல்லத்துக்கும் பொருத்தமான தயாரிப்பாக கருத முடியும்” என்றார்.

களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 48 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2008 இல் களனி கேபிள்ஸ் பி.எல்.சி. “சுப்பர் பிரான்ட்” நிலையை எய்தியிருந்தது. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபல்ஸ் பி.எல்.சி. நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. 2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில், இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது. SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதுகள் வழங்கும் நிகழ்வில், தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது.

களனி கேபல்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

2015 இல் களனி கேபல்ஸ் பி.எல்.சி. ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தனதாக்கியிருந்தது. களனி கேபள்ஸ் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபல்ஸ் உற்பத்தி பிரிவு, 2015 தேசிய பசுமை விருதுகள் வழங்கலில் நிலைபேறான அபிவிருத்திக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது. 2015 இல் நிறுவனம் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கலின் போது B2B பிரிவில் சிறந்த நிறுவனசார் சமூக பொறுப்புணர்வு செயற்பாட்டுக்கான விருதை தனதாக்கியிருந்தது.

2016ம் ஆண்டில் தேசிய மனித வளங்கள் சிறப்புக்கான வெள்ளி விருதை தனதாக்கியிருந்ததுடன் ஜனாதிபதி சூழல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சூழல் பாதுகாப்பான  அறிக்கையிடலுக்கான தங்க விருதையும் தனதாக்கியிருந்தது.