இன்றைய திகதியில் அனைத்திலும் வேகம் வேகம் தான். உணவு சாப்பிடுவதிலும் வேகம். உணவு தயாரிப்பதிலும் வேகம். இதனால் நாம் சாப்பிடும் உணவு நமக்கே எமனாக வந்துவிடுகிறது. அதிலும் ப்ரென்ச் ப்ரை என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும் அல்லது உடனடியாக தயாரித்து வழங்கும் இந்த உணவு தான் எம்முடைய ஆரோக்கியத்திற்கு வேட்டு வைத்து, ஆயுளையே குறைத்து விடுகிறது.

உருளைக்கிழங்கை வேகவைக்காமல் அப்படியே அதிக சூட்டில் அதிகளவிலான எண்ணெயில் பொரித்து சுவையாக சாப்பிடுகிறார்கள். இதனை தொடர்ச்சியான உணவு பழக்கமாகவே மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இது வயிற்றிற்குள் சென்றவுடன் கெட்ட கொழுப்பாக மாறி, செரிமான மண்டலத்தின் பணிகளில் குறுக்கிட்டு, உடல் எடையை அதிகரித்து, உடற் பருமனை உண்டாக்குகிறது. உடற்பருமனை உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி இதயத்தை தாக்கி, மரணத்தை பரிசாக அளித்துவிடுகிறது.

ஒர் ஆய்வில் ப்ரென்ச் ப்ரை என்ற உணவை மட்டுமே தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் வரை சாப்பிட்ட ஒரு ஆரோக்கியமானவர், தன்னுடைய ஆயுளில் 8 ஆண்டுகளை இழந்து, மரணத்தைச் சந்தித்திருக்கிறார். ஆகவே சுவையாக இருக்கிறது என்று துரித வகை உணவுகளை அதிகளவில் தொடர்ச்சியாக சாப்பிடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் மருத்துவர்கள்.

டொக்டர் பத்மா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்