ட்ரம்ப் ஒரு பித்துப் பிடித்த கிழவர் : பதி­லடி கொடுக்கும் ட்ரம்ப்

Published By: Robert

13 Nov, 2017 | 09:48 AM
image

அமெ­ரிக்க  ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பை  பித்துப் பிடித்த கிழவர் என வட கொரிய அர­சாங்க ஊடகம்  குறிப்­பிட்­டி­ருந்த நிலையில், அதற்கு பதி­லடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் தனது டுவிட்டர் இணை­யத்­தளப் பக்­கத்தில் செய்­தி­யொன்றை நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ளார்.

“ நான் அவரை  (வட கொரிய தலைவர் கிம் யொங் – உன்னை) குள்­ள­மா­னவர்  என்றோ  கொழுத்­தவர் என்றோ   ஒரு­போதும் அழைத்­தி­ராத நிலையில்,  அவர்  ஏன்  என்னை கிழவர்  என அழைத்து அவ­தூறு செய்­கிறார்?”  என  டொனால்ட் ட்ரம்ப்  தனது டுவிட்டர் இணை­யத்­தளப் பக்­கத்தில்  தன்னால்  வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­தியில் குறிப்­பிட்­டுள்ளார்.

வட கொரிய தலை­வ­ருடன் நட்பை ஏற்­ப­டுத்த  கடு­மை­யாக முயற்­சித்து வரு­வ­தா­கவும் ஒருநாள்  தாம் நண்­பர்­க­ளாக  மாறக்­கூடும் என நம்­பு­வ­தா­கவும் டொனால்ட் ட்ரம்ப்  இதன்­போது தெரி­வித்தார்.

கொரிய அர­சாங்க ஊட­க­மான  கொரிய மத்­திய செய்தி முகவர்  நிலையம் அன்­றைய தினம் மேற்­படி செய்தி வெளி­யா­வ­தற்கு முன்னர்  வெளி­யிட்ட பிறி­தொரு செய்­தியில்  டொனால்ட் ட்ரம்பின் ஆசிய பிராந்­தி­யத்­துக்­கான விஜயம் தொடர்பில் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது.

 டொனால்ட் ட்ரம்ப்  உலக சமா­தானம் மற்றும் ஸ்திரத்­தன்­மைக்கு பங்கம் ஏற்­ப­டுத்­து­ப­வ­ரா­கவும்  கொரிய தீப­கற்­பத்தில்  அணு ஆயுதப் போரொன்றை ஆரம்­பிக்க கெஞ்­சு­ப­வ­ரா­கவும்  உள்ளார் என அந்த செய்­தியில்  விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது.

 தமது அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து மக்­களை ஒதுக்­கி­வைப்­ப­தற்­கான முயற்­சியை  ட்ரம்ப்  மீண்டும் முன்­னெ­டுத்­துள்­ள­தாக  வட கொரிய வெளி­நாட்டு அமைச்சர் அந்த செய்­தியில் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். வட கொரியா முழு­மை­யான அணு ஆயுத நிகழ்ச்சித் திட்­ட­மொன்றை முன்­னெ­டுப்­பதை டொனால்ட் ட்ரம்ப்பால் தடுத்து நிறுத்­து­வது சாத்­தி­ய­மில்லை  என அவர் கூறினார்.

அதே­ச­மயம் டொனால்ட் ட்ரம்ப் வட கொரிய தலைவர் கிம் யொங்­ – உன்னிற்கு நேர­டி­யாக விடுத்த செய்­தியில், “ நீங்கள் உட­மை­யாகப் பெறும் அணு ஆயுதங்கள்  உங்களுக்கு பாதுகாப்பை அளிக்கப் போதில்லை. மாறாக  அவை  உங்கள் ஆட்சியை மரணப் புதைகுழியில் தள்ளுவதாக அமையும்"  என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21