ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்குண்டு 140 உயிரிழந்துள்ள நிலையில் 1000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் - ஈராக் எல்லையிலுள்ள ஹலாப்ஜா நகருக்கு அண்மையில் இன்று அதிகாலை 7.3 ரிச்டர் அளவிலான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கிலோ மீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கத்தால் பாரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 140 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

எனினும் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையும் சாத்தியங்கள் உள்ளதாக செய்திகய் தெரிவிக்கின்றன.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஈரான், குவைத், டுபாய், இஸ்ரேல் ஆகிய நாடுகளையும் அதிரவைத்துள்ளது. 

கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுமார் 26,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.