வரவு–செலவு திட்டம் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிரணியின் வாயை அடைக்கும்

Published By: Robert

13 Nov, 2017 | 09:35 AM
image

எதிர்வரும் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு–செலவுத் திட்டம் எங்­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்கும் எதி­ர­ணியின் வாயை அடைக்கும் என தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

ரம்­பொட  ஸ்ரீ கல்கி மாணவர் சேவா அமைப்பு ஒழுங்கு செய்­தி­ருந்த இவ்­வ­ருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்­சையில் சித்­தி­பெற்ற மாண­வர்களை கௌர­விக்கும் நிகழ்வு ரம்­பொட தொண்­டமான் கலா­சார மண்­ட­பத்தில் நேற்று  தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலை­மையில் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் கொத்­மலை மற்றும் உட­ப­லாத்த பிர­தே­சங்­களில் சித்தி பெற்ற மாணவ, மாண­வி­க­ள் பதக்­கங்கள், சான்­றி­தழ்கள், பரி­சில்கள் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டனர். இதன்போது மாண­வர்­களின் கலை கலா­சார நிகழ்­வு­களும் இடம்­பெற்­றன. இந்­நி­கழ்­வில் பார­ாளு­மன்ற உறுப்­பினர் தில­கராஜ், கல்­வித்­து­றையை சேர்ந்­த­வர்கள், கட்சி உறுப்­பி­னர்கள் என பலரும் கலந்து கொண்­டனர். இந்­நி­கழ்வின் பின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்கையில், எதிர்வரும் 2018ஆம் ஆண்­டுக்­கு­ரிய வரவு–செலவு திட்­ட­மா­னது இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஏற்­றுக்­கொள்ளக்கூடிய ஒன்­றாக அமையும். இந்த வரவு–செலவு திட்­டமானது மலை­யகம், வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு வாழ் மக்கள் தனித்து சொந்த வீடு­களில் வாழும் வாய்ப்பை பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது.

சூழ­லுக்கு ஏற்ப தனி­வீ­டுகள் அமைக்­கப்­பட்டு சுதந்­தி­ர­மாக வாழக்­கூ­டிய வசதி இந்த வரவு–செலவு திட்­டத்­தின் ஊடாக ஏற்­ப­ட­வுள்­ளது. வரவு–செலவு திட்­டத்தின் வாதப் பிர­தி­வா­தங்கள் பாரா­ளு­மன்­றத்தில் ஒரு மாத காலத்­திற்கு இடம்­பெறும். இதன்பின் மக்கள் அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளக்கூடிய அபி­வி­ருத்தி திட்­ட­ங்கள் இவர்­க­ளுக்கு கிட்டும். அந்த நிலையில் எங்­களை எதிர்த்து பிரசாரம் செய்யும் எதி­ர­ணியின் வாய் அடைக்­கப்­படும் என்­பதில் ஐயமில்லை.

சமீ­பத்தில் பாரா­ளு­மன்­றத்­திற்கு நடி­கர்கள் வருகை தந்­தார்கள். அதை மக்கள் கண்­­டி­ருப்­பீர்கள். இந்த நடி­கர்கள் தான் இந்த நாட்டின் வளர்ச்­சிக்கு பாத­க­மாக செயற்­ப­டு­ப­வர்கள். அர­சியல் யாப்பு வரக்­கூ­டாது என்­பதை தெரி­வித்­த­வர்கள் யார்?

இவர்கள் இந்த நாட்டில் பௌத்த மக்­க­ளுக்கு தனி ஒரு இடம் இல்­லாமல் போய்­விடும் என்று கூறிக்­கொண்டே இந்த அர­சியல் யாப்பை எதிர்த்து நின்­றார்கள். வானத்தில் இருந்து குதித்­த­வர்கள் அல்ல இவர்கள்.

நாங்கள் எடுப்பார் கைப்­பிள்ளை போல் இருக்க மாட்டோம். முன்னாள்  ஜனா­தி­பதி ஜய­வர்­தன காலத்தில் இருந்து நிலை­யான அர­சியல் யாப்பு அனைத்து மக்­க­ளையும் காப்­பாற்ற கூடிய வகையில் அமைந்திராத சூழ்நிலையில் இந்த புதிய அரசியல் யாப்பு அனைத்து மக்களையும் காக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பது அனைத்து மக்களாலும் வரவேற்கத்தக்க கூடியதாக இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55