மூன்று இரு­ப­துக்கு 20 போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யாட மேற்­கிந்­தியத் தீவுகள் அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தான் செல்ல இருக்­கி­றது.

பாகிஸ்தான் கிரிக் கெட் சபையும், மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும் அடுத்த 5 ஆண்­டுகளில் ஒவ்­வொரு ஆண்டும் இரு­ப­துக்கு 20 போட்டித் தொடரில் விளை­யாட ஒப்பந்தம் செய்­துள்­ளன. இதை பாக். கிரிக்கெட் சபைத்  தலைவர் நஜீம்­சேத்தி உறு­திப்­ப­டுத்­தினார்.

அவர் மேலும் கூறு­கையில், இரு கிரிக்கெட் சபை­களும் அடுத்த 5 ஆண்­டுகளுக்கு இரு­ப­துக்கு 20 போட்டி தொடரில் விளை­யாட ஒப்­பந்தம் செய்துள்­ளன. 

போட்­டிகள் பாகிஸ்தான் மற்றும் அமெ­ரிக்­காவில் நடை­பெறும். திக­திகள் மற்றும் இடங்கள் பிறகு முடிவு செய்­யப்­படும். 

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்­தானில் மூன்று இரு­ப­துக்கு 20 போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. முதல் போட்டி மார்ச் மாதம் 29ஆம் திக­தியும், 2ஆ-வது போட்டி 31ஆம் திக­தியும், 3-ஆவது போட்டி ஏப்ரல் மாதம் முதலாம் திகதியும் நடைபெறவுள்ளன என்றார்.