பொதுவாக எம்மில் பலருக்கும் சர்க்கரைநோயின் அறிகுறியைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள்.  ஆனால் அவற்றில் தற்போது அரிப்பையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். 

பொதுவாக எம்முடைய கைகளில் அல்லது கால்களில் அல்லது உடலின் வேறு பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டால் அது ஒவ்வாமையின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம் என்று தான் கருதி வந்தோம். ஆனால் தற்போது ஒவ்வாமையில்லாமலும் ஒரு சிலருக்கு முன் கை மற்றும் கால்மூட்டிற்கும் கணுக்காலிற்கும் இடைப்பட்ட பகுதியில் அரிப்பு எடுத்தால் அது சர்க்கரையின் நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

இரத்தத்தில் அதிகளவில் உள்ள சர்க்கரையின் அளவால், நரம்புகளின் ஊடேச் செல்லும்போது, அது பாதுகாப்பு அரணாகத்திகழும் நார்ச்சத்துகளை சிதைத்துவிடுவதால் உடனடியாக அங்கு அரிப்பு ஏற்படுகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் அதிகளவிலான நார்ச் சத்துள்ள உணவுப் பொருளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இது போன்ற அரிப்பு வந்தவுடன் உடனடியாக சர்க்கரையின் அளவை பரிசோதிக்கவேண்டும். பின்னர் மருத்துவர்களிடம் ஆலோசனையும் பெற்றால், அவர்கள் எம்மாதிரியான நார்ச்சத்துள்ள உணவினை எப்போது எந்தளவில் சாப்பிடவேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். அதனை கடைபிடித்தால் இந்த அரிப்பு நாளடைவில் மறைந்துவிடும். அதனையடுத்து சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொண்டும், கண்காணித்துக் கொண்டும் இருந்தால்  இதன் பாதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

டொக்டர் செல்வப்பாண்டியன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்