மாளிகாவத்தை - கொழும்பு வைத்தியசாலையின் கழிவறைக்குள் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த இவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு ஆகிய நோய் இருந்துள்ளதாகவும், இதனாலேயே இவ்வாறு தீக்குளித்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.