‘மிஸ்டர் பீன்’ என்ற கதாபாத்திரத்தில் உலகையே வசீகரித்த நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தனது மூன்றாவது குழந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், தனது இரண்டாவது மனைவியின் மூலம்!

ரோவன் அட்கின்சன் தனது இரண்டாவது மனைவியுடன்!

62 வயதாகும் ரோவன் அட்கின்ஸன் ஏற்கனவே இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுனேத்ரா சாஸ்திரி என்ற ஒப்பனைக் கலைஞரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு லில்லி, பெஞ்சமின் என்று ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். 

ரோவன் அட்கின்சன் தனது மகள் லில்லி மற்றும் முதல் மனைவி சுனேத்ரா சாஸ்திரியுடன்!

சுனேத்ராவுடனான 24 வருட திருமண வாழ்க்கை 2015ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தனது சக நடிகையான லூயிஸ் ஃபோர்ட் (33) என்பவருடன் காதலில் விழுந்த ரோவன், சுனேத்ராவை விவாகரத்துச் செய்த ஓரிரு வாரங்களில் போர்டை மறுமணம் செய்துகொண்டார். தற்போது ரோவன் தனது புதிய மனைவியுடனும் மகன் பெஞ்சமினுடனும் வாழ்ந்து வருகிறார்.

ரோவன் அட்கின்சனின் மகன் பெஞ்சமின் அட்கின்சன்

எனினும், தனது தந்தையின் செயலால் கோபம் கொண்ட லில்லி (22) அவரது பெயரில் இருந்து ‘அட்கின்ஸன்’ என்ற பெயரை சட்ட ரீதியாக விலக்கிக்கொண்டதுடன், தனது தாயின் பெயரில் இருக்கும் ‘சாஸ்திரி’ என்ற பெயரைச் சேர்த்துக்கொண்டார்.

இந்த நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் ரோவனின் புதிய மனைவி ஃபோர்ட், தனது முதல் குழந்தையை ஈன்றெடுக்கவுள்ளார்.