பகல் உணவின் விலை 10 ரூபாவால் குறையுமா.?

Published By: Robert

12 Nov, 2017 | 09:39 AM
image

இறக்­கு­மதி செய்­யப்­படும் உணவுப் பொருட்கள் சில­வற்­றுக்­கான விசேட வர்த்­தக வரியை அர­சாங்கம் குறைத்­துள்­ளது. 

எனவே அதன் பிர­தி­பலன் நுகர்­வோரைச் சென்­ற­டை­யு­மாக இருந்தால் பகல் உண­வுப்­பொதி ஒன்றின் விலையை பத்து ரூபாவால் குறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக சிற்­றுண்­டிச்­சா­லைகள் உரி­மை­யாளர் சங்­கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரி­வித்தார்.

இறக்­கு­மதி செய்­யப்­படும் ஆறு உண­வுப்­பொ­ருட்­களின் விசேட வர்த்­தக வரியை கடந்த புதன் கிழமை நள்­ளி­ரவு முதல் அமு­லுக்கும் வரும் வகையில் குறைப்­ப­தாக நிதி­ய­மைச்சர்  மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தி­ருந்தார். எனவே உணவுப் பொருட்­களின் விலை குறைந்­துள்ள நிலையில் சிற்­றுண்­டிச்­சா­லை­களில் விற்­படும் உணவுப் பொருட்­களின் விலை தொடர்பில் வின­விய போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அர­சாங்கம் 2018 ஆம் ஆண்­டுக்­காக சமர்ப்­பித்­துள்ள வர­வு-­செ­ல­வுத்­திட்­டத்தில் மக்­க­ளுக்கு சலுகை வழங்­கப்­ப­ட­வில்லை. எனினும் சில துறை­க­ளுக்கு வரி விலக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அச்­ச­லு­கை­களை மக்கள் அடைந்­து­கொள்ளும் வகையில் ஏற்­பா­டுகள் இல்லை. ஆகவே அவ்­வ­ரிச்­ச­லுகை இறக்­கு­ம­தி­யா­ளர்கள் உட்­பட வர்த்­தக சமூ­கத்­தி­ன­ருக்கே கிடைக்­க­வுள்­ளது. 

எனவே இறக்­கு­ம­தி­செய்­யப்­படும் உரு­ளைக்­கி­ழங்கு, பெரிய வெங்­காயம், பருப்பு, கரு­வாடு,தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்­கறி எண்ணெய் என்­ப­வற்­றுக்­கான விசேட வர்த்தக வரி குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளபோதிலும் அதன் பலன் நுகர்வோருக்கு கிடைக்கப்போவதில்லை என்றார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04