தாயே மகளை மணந்த சம்பவத்தில், மகள் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அமெரிக்காவின் ஒக்லஹாமாவில் இடம்பெற்றுள்ளது.

பெட்ரீஷியா ஸ்பேன் (44) என்பவர் இரண்டு மகன்மார் மற்றும் ஒரு மகளின் தாய். எனினும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரது பிள்ளைகள் மூவரும் அவரிடம் இருந்து சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்டு தமது பாட்டியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இரண்டு வருடங்களாகப் பிள்ளைகளுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்த பெட்ரீஷியா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது மகள் மிஸ்ட்டி (26)யைத் ‘திருமணம்’ செய்துகொண்டார்.

இதுபற்றித் தெரியவந்த சிறுவர் துஷ்பிரயோகப் பிரிவினர் பெட்ரீஷியா மற்றும் மிஸ்ட்டியின் மீது முறையற்ற உறவு முறையைத் தொடர்ந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், பெட்ரீஷியாவின் மகள் மிஸ்ட்டி குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதுடன், அவருக்குப் பத்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெட்ரீஷியாவின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.

இதற்கு முன், பெட்ரீஷியா கடந்த 2008ஆம் ஆண்டு, அப்போது பதினெட்டு வயது நிறைந்த தனது மகனைத் திருமணம் செய்துகொண்டார். என்றபோதும், இரண்டு வருடங்களின் பின் - அதாவது 2010ஆம் ஆண்டு, முறையற்ற உறவு என்று குறிப்பிட்டு அவரது மகன் பெட்ரீஷியாவை விவாகரத்துச் செய்திருந்தார்.

மேற்படி திருமணம் குறித்த வழக்கில் பெட்ரீஷியாவுக்கு விரைவில் தீர்ப்பு வெளியாகவிருக்கிறது.