திருகோணமலை – சேநுவர, உடப்புக்கேணி பிரதேசத்தில் நேற்று மாலை உழவு இயந்திரம் ஒன்று மோதியதில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த 19 வயதுடைய இளைஞர் வயலில் உழவு வேலை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போதே விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.