ஹட்டன் - பொகவந்தலா பிரதான வீதியில் வனராஜா பகுதியில் இன்று மதியம் லொறியொன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  டிக்கோயா வனராஜா  தேயிலை தொழிற்சாலைக்கருகில் நோர்வுட் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி  பாதையை வீட்டு விலகி டிக்கோயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் யாருக்கும் பாதிப்புகள் இல்லையென பொலிஸார் தெரிவித்ததுடன், பாதையோரமிருந்த மின்கம்பம் சேதமானதாகவும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.