பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  நள்ளிரவில்  மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக  பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

இவ் விசேட வீதிசோதனை நடவடிக்கை நேற்று  இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 3 மணிவரை  இடம்பெற்றுள்ளது.  இதில்  மட்டக்களப்பு  தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 19 பேரையும், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 3 பேரையும், வாகரை பொலிஸ் பிரிவில் 4 பேரையும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 5 பேரையும்,கரடியனாறு பொலிஸ் பிரிவில் 2 பேர் உட்பட 36 பேரை கைது செய்துள்ளனர்

மதுபோதையில் வாகனம் செலுத்தியோர், நீதிமன்ற பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டு தலை மறைவாகியவர்கள், கஞ்சாவுடன் மற்றும் சந்தேகத்துக்கு இடமாக நள்ளிரவில் வீதிகளில் நடமாடியவர்கள் உட்பட 36 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.