பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.

15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் புதிய சாதனை நிலைநாட்டிய சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை (63.01 மீ) வென்றார். இவர் முதல் நேற்று குண்டு எறிதலில் வெண்கலம் வென்றிருந்தார்.

இதே கல்லூரியைச் சேர்ந்த ரகுராஜ் சஞ்சய் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் (13.51 மீ.) வென்றார்.

மற்றொரு வீரரான பிரேம்குமார் மிதுஷான் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் தட்டெறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.