நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டாலும் பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்படவில்லை. மலையக அரசியல் தலைவர்கள் கோரும் பதினைந்து பிரதேச செயலகங்களைக் கொடுக்க முடியாது என்றாலும், 10ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதேச செயலங்களின் எண்ணிக்கையை ஐந்து முதல் பத்து வரை அதிகரிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். எனினும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை அதிகரிப்பதற்கான உறுதியான திகதியை குறிப்பிட முடியுமா? என மயில்வாகனம் திலகராஜ் எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார்.