சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர், நான்காம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராகமை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

பமுனுவ, போபிட்டிய பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஆரச்சிகே சோமதாச (65) என்பவர், சிறுநீரகக் கோளாறு காரணமாக ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நோயின் தாக்கத்தைத் தாங்க முடியாமலோ அல்லது அடுத்து என்ன செய்வது என்று புரியாத கலக்கத்தினாலோ குறித்த நபர் கடந்த மூன்று நாட்களுக்குள் ஓரிரு முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (10) அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நான்காம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த விசாரணைகளை ராகமை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.