புகையிரதத்தினுள் அனுமதி பெறாமல் பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கு புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இத்தீர்மானத்தையடுத்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் அதேவேளை, சிறு வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.