சீனாவின் போர் பயிற்சி கப்பல் இலங்கையை வந்தடைந்தது.! (வீடியோ இணைப்பு)

Published By: Robert

10 Nov, 2017 | 04:45 PM
image

(டி.ரஸ்மிலா)

இந்து சமுத்­தி­ரத்தின் மேலா­திக்­கத்தை உறு­திப்­ப­டுத்தும் கடல்சார் இரா­ஜ­தந்­திர போர்க்­க­ள­மாக இலங்கை மாறி­யுள்­ளது. இந்­தியா, பாகிஸ்­தான் அமெ­ரிக்காவைத் தொடர்ந்து சீன இராணுவத்தின் குய் ஜிகுவாங் போர் பயிற்சி கப்பலொன்று இன்று காலை இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 

உத்தியோகபூர்வமாக கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பளித்தனர்.

சுமார் நீளம் 165.3 மீற்றர் கொண்ட 9000 தொன் கொள்ளளவுடையதுமான குறித்த கப்பல், 4 நாட்கள் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும், எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்லும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சுமூக உறவை மேலும் வளப்படுத்துதல், அனுபவ பரிமாற்றம், நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் நோக்கில் இலங்கை வந்துள்ள இந்த போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் போது, இன்றும் நாளையும் இலங்கை கடற்படையினருடன் பல்வேறு நிபுணத்துவ பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, இந்த சீன போர் பயிற்சி கப்பலை பார்வையிடுவதற்கான வாய்ப்புகள் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட குய் ஜிகுவாங் கப்பல் கடந்த பெப்ரவரி மாதம் சீன இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  

1528 தொடக்கம் 1588 சீனாவின் மிங் வம்சத்தின் இராணுவத் தளபதியாக செயற்பட்டார்.  16 ஆம் நூற்றாண்டில் சீனாவின் கரையோர பகுதிகளில் காணப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது குய் ஜிகுவாங் நன்கு அறியப்பட்டவர். எனவே சீன அரசு இந்த கப்பலுக்கு அவரின் பெயரை வைத்துள்ளது. 

புகழ்பெற்ற மரபுகளைச் பாதுகாத்தல் மற்றும் சிறந்த கடற்படை சேவையாளர்களை பயிற்றுவித்தல் மற்றும் பாதுகாப்பு துறைசார் இராஜதந்திரத்தை முன்னெடுப்பது குய் ஜிகுவாங் கப்பலின் இலக்குகளாக காணப்படுகின்றது. 

கடந்த மூன்று வாரத்­தி­லி­ருந்து இன்­று­ வ­ரையில் இந்­தோ­னே­ஷியா, தென்­கொ­ரியா, பங்­க­ளாதேஷ், அமெ­ரிக்கா, இந்­தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடு­களின் போர்க்­கப்­பல்கள் கொழும்பில் நங்­கூ­ர­மிட்­டன. இதனைத் தொடர்ந்தே சீனாவின் போர்க்­கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

பல முக்­கிய நாடு­களின் போர்க் கப்­பல்கள் இலங்­கையை நோக்கி நகர்த்­தப்­ப­டு­கின்­றமை இந்து சமுத்­தி­ரத்தின் மீதான ஆளு­மையை வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன. 

இதுவரையில் இலங்­கையை வந்­த­டைந்த அனைத்து கப்­பல்­களும் நல்­லெண்ண விஜ­யத்தின் அடைப்­ப­டை­யி­லேயே வரு­வ­தாக அந்த நாடுகள் குறிப்­பிட்­டுள்­ளன. ஆனால் அந்த விஜ­யங்கள் இந்து சமுத்­தி­ரத்தின் கடல்சார் பன்­னாட்டு இரா­ஜ­தந்­திர நகர்­வு­களை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே அமை­கின்­றது என இரா­ஜ­தந்­திரி ஒருவர் கருத்து வெளி­யிட்டார். 

இந்து சமுத்­தி­ரத்தில் அமெ­ரிக்­காவின் செல்­வாக்கு உயர்ந்தே காணப்­ப­டு­கின்­றது. இதற்கு அமை­வா­கவே ஜப்பான், அவுஸ்­தி­ரே­லியா மற்றும் சிங்­கப்பூர் ஆகிய நாடு­களில் அமெ­ரிக்க பாது­காப்பு தளங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வே­ளை­ இந்து சமுத்­தி­ரத்தில் ஏற்­பட கூடிய புதிய சவால்­களை எதிர்­கொள்­வ­தற்கு இலங்­கையின் ஒத்­து­ழைப்­புகள் இன்­றி­ய­மை­யா­த­வை­யா­கி­யுள்­ளன. 

இதே­வேளை, சீனாவின் நகர்­வு­களும் அண்­மைக்­கா­ல­மாக தீவி­ர­ம­டைந்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33