சவூதி அரே­பிய முன்னாள் முடிக்­கு­ரிய இள­வ­ர­சரின் வங்கிக் கணக்­குகள் முடக்கம்

Published By: Priyatharshan

10 Nov, 2017 | 03:32 PM
image

சவூதி அரே­பி­யாவின் முன்னாள் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் நயிப்பின் வங்கிக் கணக்­குகள்  முடக்­கப்­பட்­டுள்­ள தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஜூன் மாதம் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் நிலை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட அவர் அந்­நாட்டில் ஊழ­லுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கையின் கீழ் இலக்­கு­வைக்­கப்­பட்ட பிந்­திய அரச குடும்ப அங்­கத்­த­வ­ரா­க­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. மேற்­படி நட­வ­டிக்­கையின் பிர­காரம் இள­வ­ரசர் மொஹமட் பின் நயிப்­பி­னதும் அவ­ரது நேரடி  உற­வி­னர்­க­ளதும் வங்கிக் கணக்­குகள் சவூதி அதி­கா­ரி­களால் முடக்­கப்­பட்­டுள்­ளன.

ஏற்­க­னவே இந்த ஊழ­லுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையின் கீழ் அந்­நாட்டைச் சேர்ந்த 11  இள­வ­ர­சர்­களும் 4 அமைச்­சர்­களும் பல முன்னாள்  அமைச்­சர்­களும் கைது­செய்து தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த நட­வ­டிக்­கை­யா­னது அந்­நாட்டு தற்­போ­தைய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான், தனக்கு  சவா­லாக இருப்­ப­வர்­களை அகற்றி தான் அதி­கா­ரத்­துக்கு வரு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு மேற்­கொண்ட ஒரு செயற்­பா­டாக  நோக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் சவூதி அரே­பி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்ட பெருந்­தொ­கை­யான கைதுகள் மனித உரி­மைகள் தொடர்­பான கவலையை அதிகரிப்பதாகவுள்ளதாக  அமெ ரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணி ப்பகம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47