6 வரு­டங்­க­ளாக மனைவியை பாலி­யல் ­கை­தி­யாக வைத்­தி­ருந்த நபர்

Published By: Digital Desk 7

10 Nov, 2017 | 03:46 PM
image

நப­ரொ­ருவர் தனது மனைவியை 6 வரு­டங்­க­ளாக  ஜன்­னல்கள் மரச்­சட்டத்தால் அடைக்­கப்­பட்ட கொங்­கிறீட் சுவர்­களைக் கொண்ட வீட்டில் பாலியல் கைதி­யாக அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்­தி­ர­வதை செய்து வந்த சம்­பவம்  ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ததார் முஸ்­லிம்­க­ளுக்­கான  வாழ்க்கைத் துணை­களை தேடு­வ­தற்­கான இணை­யத்­தள பக்­கத்தின்  மூலம் ஒரு­வ­ருக்­கொ­ருவர் அறி­மு­க­மான றினாத் பில்­யனோவ் என்ற மேற்­படி நபரும் லிலியா என்ற குறிப்­பிட்ட பெண்ணும் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக திரு­மணம் செய்து இணைந்து வாழ ஆரம்­பித்­தனர். 

இதன்­போதே றினாத் மொஸ்கோ பிராந்­தி­யத்தில் புஷி­கினோ எனும் இடத்­தி­லுள்ள சூரிய ஒளி உட்­பி­ர­வே­சிக்க முடி­யாத வகையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த வீட்டில் லிலிலாவை சிறை வைத்­துள்ளார். 

அவர் லிலி­லாவை  பாலியல் அடி­மை­யாக நடத்­தி­ய­துடன் அடித்து உதைத்து சித்­தி­ர­வதை செய்தும் வந்­துள்ளார்.

இந்த சிறை வாழ்க்­கையின் போது லிலிலா  4 தட­வைகள் கர்ப்­ப­ம­டைந்து  4 குழந்­தை­களை பிர­ச­வித்துள்ளார்.   இந்­நிலையில் அந்தக் குழந்­தை­களும் அவ­ருடன் அதே வீட்டில் பண­யக்­கை­தி­க­ளாக அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

லிலி­லாவின் பெற்றோர் தனக்கு 2.5  மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான  பணத்தை வழங்­கினால் மட்­டுமே  அவரை அங்­கி­ருந்து  செல்­வ­தற்கு அனு­ம­திக்க முடியும் என றினாத் அவ­ருக்கு நிபந்­தனை விதித்­துள்ளார்.

தனது பிள்­ளை­க­ளுக்கு லிலி­லாவை ஒரு பிசாசு என றினாத் தெரி­வித்து அவர்­களை அச்­ச­ம­டைய வைத்­தி­ருந்தார். 

அத்துடன் பிள்­ளை­க­ளுக்கு அவர்கள்  வளர்ந்­ததும் இதுபோன்று லிலி­லாவை அடித்து உதைக்க வேண்டும் என அவர் போதனை செய்து வந்­துள்ளார்.

அந்தப் பிள்­ளைகள் லிலி­லா­வுடன் அதே வீட்டில் வாழ்­ந்த போதும், றினாத்  இடையிடையே அவர்­களை  வெளியில் அழைத்துச் செல்­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­துள்ளார். 

இந்­நி­லையில் லிலிலா இந்த வாரம் ஒரு­வா­றாக பொலி­ஸா­ருக்கு  தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி தனது அவல நிலை குறித்து அறி­வித்­த­தை­ய­டுத்து அவரும் அவ­ரது 4  பிள்­ளை­களும் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.

மீட்கப்பட்டபோது அந்தப் பிள்ளைகள் இயல்பாகப் பேச முடி­யாத நிலையில் காணப்­ப­ட்டதாகவும் லிலி­லாவும் அவரது பிள்ளைகளும் தற்போது பெண்களுக்கான நிலையமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35