கிளி­நொச்சி திரு­மு­று­கண்டிப் பிள்­ளையார் ஆல­யத்­திற்கு அண்­மையில் வசித்து வரும் இளம் தம்­ப­தி­க­ளான குமா­ரவேல் டினேஸ்  ஜான்சன்  மற்றும் ஜான்சன் அன்­பு­மணி  ஆகி­யோரின் 3½ மாத  ஆண் குழந்­தை­ ஜான்சன் விரன்  படுக்­கையில் இருந்த நிலையில் நேற்று இரவு 8 மணி­ய­ளவில் உயிரிழந்துள்ளது.

இச் சம்­பவம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

பெற்றோர் இரு­வரும் அறி­வியல் நக­ரி­லுள்ள ஆடைத்­தொ­ழிற்­சா­லை ஒன்றில் வேலை செய்து வரு­வ­தா­கவும் மழை வெள்­ளப்­பா­திப்­புக்­க­ளுடன் பாது­காப்­பற்ற வீட்டில் வசித்து வரு­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

கடந்த சில தினங்­க­ளாக பெய்து வரும் அடை மழை கார­ண­மா­கவும் சம்­பவ தினம் அன்றும் கடுங் குளிரும் மழையும் ஏற்­பட்ட நிலையில் அதீத குளிர் கார­ண­மாக விறைப்பு ஏற்­பட்டு குழந்தை இறந்­தி­ருக்­கலாம் என்ற சந்­தே­கத்தில் மரண விசா­ர­ணையை மேற்­கொண்ட கிளி­நொச்சி மரண விசா­ரணை அதி­கா­ரி­யினால் மர­ணத்­திற்­கான காரணம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் உடல் உறுப்­புக்­கள் பிரேத பரி­சோ­த­னைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.