தஜி­கிஸ்­தானில் நடை­பெற்று முடிந்­தி­ருக்கும் 19 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான 2018 ஆம் ஆண்டின் ஆசிய கால்­பந்து சம்­மே­ளன கிண்ணத் தொடரின் தகு­திகாண் போட்­டி­களில் 'பி' குழு­விற்­கான இறுதி ஆட்­டத்தில் பங்­க­ளாதேஷ் 4-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கையை இல­கு­வாக வீழ்த்­தி­யுள்­ளது.

இந்தப் போட்­டியில் பங்­க­ளாதேஷ் வெற்­றி­யீட்­டி­யிருந்த போதிலும் தொடரில் மொத்­த­மாக இரண்டு வெற்­றி­களை மாத்­தி­ரமே பெற்­றி­ருந்த கார­ணத்­தினால் ஆசிய கால்­பந்து சம்­மே­ளன கிண்ணத் தொடரில் பங்­கேற்கும் வாய்ப்பை அவ்­வணி இழந்­தி­ருக்­கின்­றது.

இலங்கை அணி மாலை­தீ­வு­ட­னான போட்­டியை 2–-2 என்ற கோல்கள் கணக்கில் சமப்­ப­டுத்­தி­யி­ருந்த அதே­வேளை, உஸ்பெ­கிஸ்தான் மற்றும் தஜி­கிஸ்தான் அணி­க­ளு­ட­னான போட்­டி­களில் முறையே 10–-0 மற்றும் 6–-0 என்­கிற கோல்கள் அடிப்­ப­டையில் படுதோல்வியடைந்திருந்த இலங்கை அணி பங்களாதேஷிட மும் 4–0 என தோற்றது.