உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்பை அறிந்­து­கொண்டு யாரா­வது இரட்டைப் பிரஜாஉரி­மையை பாரா­ளு­மன்­றத்­துக்கு மறைத்தால் அவர்­க­ளுக்கு நீதி­மன்­றத்தின் தீர்ப்­புடன் சிறைத்­தண்­ட­னையும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இரட்டை பிரஜா உரி­மையை வகிக்க முடி­யாது என உயர்­நீ­தி­மன்­றத்தின் வியாக்­கி­யானம் மற்றும் தீர்ப்பின் மூலம் அது சட்­ட­மாக்­கப்­பட்­டி­ருப்­பதை நாட்டு மக்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 225 பேரும் தற்­போது அறிந்­துள்­ளனர். 

இந்­நி­லையில் இதற்கு பின்­னரும் யாரும் அதனை மறைத்து செயற்­பட முடி­யாது. மேலும் கீதா குமா­ர­சிங்க இரட்டை பிரஜா உரி­மை­யுடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக செயற்­ப­டு­வது சட்­ட­வி­ரோதம் என தெரி­வித்து மேன்முறை­யீட்டு நீதி­மன்­றத்தில் தொடுக்­கப்­பட்ட வழக்கின் பிர­காரம் நீதி­மன்றம் அவ­ருக்கு தொடர்ந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்க முடி­யாது என தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.

அத்­துடன் மேன்முறை­யீட்டு நீதி­மன்­றத்தின் தீர்ப்பை  உயர் நீதி­மன்­றமும் உறு­திப்­ப­டுத்தி தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது. இதன் மூலம் கீதா குமா­ர­சிங்­கவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி இல்­லாமல் போவ­துடன் பாரா­ளு­மன்ற பத­வி­மூலம் அவர் பெற்­றுக்­கொண்ட அனைத்து செல­வி­னங்­க­ளையும் திருப்­பிக்­கொ­டுக்­க­வேண்டும் என்றும் உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் இரட்டை பிரஜா உரிமை வகிப்­ப­வர்கள் தெரிந்­து­கொண்டே அதனை பாரா­ளு­மன்­றத்­திற்கு மறைத்தால் அவர்­க­ளுக்கு உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்பு மாத்­திரம் போதாது. மாறாக அவ்­வா­றா­ன­வர் ­க­ளுக்கு சிறைத்­தண்­ட­னையும் வழங்­கப் ­ப­ட­வேண்டும். ஏனெனில் இரட்டை பிரஜா உரிமை வகிப்பவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என்ற

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிந்து கொண்டே இவர்கள் பாராளுமன்றத்துக்கு மறைத்த குற்றம் இவர்கள் மீது சுமத் தப்படும் என்றார்.