வவுனியா பஸ் நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் நாவற்குளி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை நேற்று மாலை 4 மணியளவில்  வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போதே  யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி  2கிலோ ஹெரோயினை பயணப்பொதியில் மறைத்து வைத்து  கடத்த முற்பட்ட குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.