பரிசோதனையில் பச்சைக்கொடி காட்டப்பட்டதையடுத்து, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ள 42 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் தற்போது கப்பலில் இருந்து இறக்கப்பட ஆரம்பித்துள்ளது.

திடீரென ஏற்பட்டிருக்கும் பெற்றோல் தட்டுப்பாட்டையடுத்து ‘நெவெஸ்கா லேடி’ என்ற எண்ணெய்த் தாங்கிக் கப்பல் நேற்று (8) குறித்த பெற்றோல் தொகையுடன் இலங்கை வந்தது.

நள்ளிரவு நேரம் முத்துராஜவலையை வந்தடைந்த கப்பலில் இருந்த பெற்றோல் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில், பெற்றோலின் தரம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து கப்பலில் இருக்கும் பெற்றோலை முத்துராஜவலை எண்ணெய்க் குதங்களில் இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இந்தப் பெற்றோல் தொகை, இன்னும் சற்று நேரத்தில் வினியோகிக்கப்படும் என்று தெரியவருகிறது.