கஹவத்தையில் மற்றொரு ஆணின் சடலம் ஆற்றில் மிதந்தது அப்பகுதியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

குறுகிய காலத்தில் சுமார் பத்து பெண்களின் உடல்கள் கஹவத்தை பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இவை, தொடர் கொலைகளாக இருக்கலாம் என்றும், திட்டமிட்டே இக்கொலைகள் இடம்பெற்று வருவதாகவும் சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கஹவத்தை, கொடகெதன கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதிவாசிகளை மேலும் பயத்துக்குள்ளாக்கியுள்ளது.

அவசர உதவி இலக்கத்துக்கு வந்த அழைப்பை அடுத்து, கால்வாயில் மிதந்தபடி இருந்த சடலத்தை பொலிஸார் மீட்டனர். தற்போது பிரேத பரிசோதனைக்காக குறித்த சடலம் இரத்தினபுரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.