ராகமையில் நேற்று (8) இரவு இடம்பெற்ற திடீர் மண்சரிவில் இளம் பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கந்தலியத்தபாலுவ என்ற இடத்தில், வீடு ஒன்றின் மீது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால், வீட்டில் இருந்த பதினெட்டு வயதுப் பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் பெற்றோரும் மகளுமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.