வாழ்க்கைச் செலவு தொடர்­பான பேச்சு வார்த்தை அமைச்­ச­ர­வையில் இடம்­பெற்­றது. இதன்போது எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ச.தொ.ச. நிறு­வ­னத்தின் தலைவர் பீ.எம்.கே.பீ. தென்­னகோன் தெரி­வித்தார்.

நேற்று கொழும்பில் இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், இலங்­கையில் தற்­போது போது­மா­ன­ளவு அரிசி களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவற்­றோடு ச.தொ.ச. நிறு­வ­னத்­தி­லுள்ள அரி­சி­யையும் சேர்த்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி எம்­மிடம் காணப்­ப­டு­கின்­றது. அவற்றை நாடு பூரா­க­வு­முள்ள ச.தொ.ச. விற்­பனை நிலை­யங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளித்து அவற்றை மக்­க­ளுக்கு குறைந்த விலையில் விற்­பனை செய்ய தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ச.தொ.ச. விற்­பனை நிலை­யங்­களில் நாட்­ட­ரி­சியை கிலோ 72 ரூபா­வுக்கு பெற்றுக் கொள்­ள­மு­டியும். மேலும் சுப்பர் மார்­கெட்­க­ளிலும் இதே விலையில் அரி­சியைப் பெற்றுக்கொள்ள முடியும். 

இதே­வேளை 5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளது. நாட்­ட­ரிசி வகை தற்­போது போது­மா­ன­ளவு காணப்­ப­டு­கின்­றது. அவற்­றோடு சிவப்­ப­ரிசி மற்றும் சம்பா என்­ப­னவும் கொள்­வ­னவு செய்­யப்­ப­ட­வுள்­ளன. 

தற்­போது நாட்டில் 370 ச.தொ.ச. விற்­பனை நிலை­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. அவற்­றோடு இன்னும் 30 நிலை­யங்கள் இணை­ய­வுள்­ளன. அவற்­றுக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் அரிசி வகைகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு மக்­க­ளுக்கு குறைந்த விலையில் விற்­பனை செய்ய தீர்­மா­னித்­துள்ளோம். 

ச.தொ.ச. நிலை­யங்­களின் எண்­ணிக்­கையை 500 வரையில் அதி­க­ரிப்­பதே எமது நோக்­க­மாகும். இதன் மூலம் மக்­க­ளுக்கு தேவை­யான அத்­தி­யா­வ­சிய பொருட்­களை குறைந்த விலையில் விநி­யோ­கிக்கக் கூடி­ய­தாக இருக்கும்.

மேலும் சில்­லறை வியா­பா­ரிகள் அரு­கி­லுள்ள ச.தொ.ச. விற்­பனை நிலை­யங்­களில் தங்­களை பதிவு செய்து மொத்­த­மாக பொருட்­களை கொள்­வ­னவு செய்து கொள்­ளவும் முடியும். அத்­தோடு எதிர்­வரும் காலங்­களில் சீனி, நெத்­தலி, வெங்­காயம்,செமன் போன்­ற­வற்­றையும் குறைந்த விலை­களில் பெற்­று­க்கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

கடந்த காலங்­களில் அசாதாரண காலநிலை மற்றும் போக்குவரத்து சிக்கல் காரணமாகவே அரிசி தட்டுப்பாடு காணப்பட்டது. இதனாலேயே அரிசியின் விலையும் அதிகரித்திருந்தது. தற்போது இப் பிரச்சினைக்கு மேற்கண்டவாறு தீர்வு காணப்பட்டுள்ளது.