ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் உலக சதுப்பு நில தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டுக்கான உலக சதுப்பு நில தினம் "எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கான ஈரநிலங்கள்: நிலையான வாழ்வாதாரங்கள்" என்ற தொனிப் பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

சதுப்பு நிலத்தையும், ஏரிகளையும் பாதுகாக்க வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகி வருகிறது என்பதை, நாம் உணர வேண்டும். 

இயற்கையின் சமநிலையைப் பேணுவதற்கு ஈரநிலங்கள் பாதுகாக்கப்படல் அவசியமாகும். 

ஈரநிலங்களைப் பாதுகாத்து நாட்டின் வளத்தை மெருகுபடுத்துவதோடு இயற்கை அனர்த்தங்களைத் தடுக்க ஈரநிலங்களையும் அது கொண்டுள்ள தாவரங்களையும் உயிரினங்களையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.