மதவாச்சியில் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சம்பவத்தில் பலியானவர் மதவாச்சி - துடின்நேகம பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண் எனவும், தற்கொலை செய்து கொண்டவர் 45 வயதான அவரது கணவர் எனவும், குடும்பத் தகறாரே இதற்குக் காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.